சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது: இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி..

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது: இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி..

(கோப்புப் படம்)

சபரிமலையில் நேற்று நடைதிறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

 • Share this:
  சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்றுமுதல் நாள்தோறும் ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. நடைமண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. டிசம்பர் 26ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும் என்றும், அன்றைய தினம் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாள்தோறும் ஆயிரம் பக்தர்களும், வார இறுதி நாட்களில் 2,000 பக்தர்களும், மகர விளக்கு பூஜையின்போது நாள்தோறும் 5,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என சபரிமலை தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

  மேலும் படிக்க...தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்  பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்யலாம். பம்பை ஆற்றில் பக்தர்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று இல்லை என 48 மணி நேரத்திற்கு முன் எடுத்த சான்றிதழை காண்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  மேலும் 10 வயது முதல் 60 வயது வரையிலான பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். கட்டாயமாக தனி மனித இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டும். அதுமட்டுமின்றி சானிடைசர் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் வழிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
  Published by:Vaijayanthi S
  First published: