சபரிமலையில் மகரஜோதி தரிசனம் செய்துவிட்டு மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பக்தர்கள் மெதுவாக மலையிலிருந்து இறங்கி வர வேண்டும் என சபரிமலை கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “சபரிமலையில் மகரஜோதி மற்றும் திருவாபரணம் அணிவித்து ஐயப்பனை தரிசனத்திற்காக சில நாட்களாக பக்தர்கள் தங்கி காத்து இருக்கின்றனர். எனவே ஐயப்ப பக்தர்கள் சம்பிரதாயங்களை பின்பற்றி ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். மகரஜோதி தரிசனத்திற்காக சன்னிதாவுக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் பரஸ்பரம் உதவி செய்ய வேண்டும். சபரிமலையை பொறுத்த வரையில் மகரசங்கிரமம் மற்றும் மகரவிளக்கு மிக முக்கியமான நிகழ்வுகள்.
பந்தளம் அரண்மனையிலிருந்து கொண்டு வரப்படும் திருவாபரணம் அணிவித்து வழிபடும் பூஜைகள் மற்றும் தீபாராதனை சனிக்கிழமைமாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. திருவாபரணம் அணிந்த ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மிக விசேஷமான மகர சங்க்ரம பூஜை சனிக்கிழமை இரவு 8.45 மணிக்கு. சிறப்பு தூதர்கள் மூலமாக திருவிதாங்கூர் அரண்மனையிலிருந்து கொண்டு வரப்படும் நெய் கொண்டு அன்று சிறப்பு அபிஷேகம் நடைபெறும். சபரிமலையில் மகரஜோதி தரிசனம் செய்துவிட்டு மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பக்தர்கள் மெதுவாக மலையிலிருந்து இறங்கி வர வேண்டும்” என்று தந்திரி கூறினார். மேலும், இதுதொடர்பாக பக்தர்களுக்கு வீடியோ ஒன்று வெளியிட்டு சபரிமலை தந்திரி அறிவுறுத்தி உள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ayyappan temple in Sabarimala, Kerala, Sabarimala devotees