சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு - உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் விசாரணை

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு - உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் விசாரணை
சபரிமலை (கோப்புப் படம்)
  • Share this:
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று முதல் விசாரிக்க உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கடந்த 2018 செப்டம்பர் 28ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி 60 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, சபரிமலை மேல்முறையீட்டு மனுக்களை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி நவம்பர் 14-ம் தேதி உத்தரவிட்டனர். இதனடிப்படையில், தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது.

இந்த அமர்வு இன்று முதல் விசாரணையை தொடங்குகிறது. இதில், ஒருமித்த தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக முந்தைய அமர்வில் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கிய நீதிபதிகளான இந்து மல்கோத்ரா உள்ளிட்டோருக்கு இந்த அமர்வில் இடம்பெறவில்லை. சபரிமலை வழக்குடன் இஸ்லாமிய பெண்களை மசூதி மற்றும் தர்காவிற்குள் அனுமதிக்க மறுப்பது, பார்ஸி இனப் பெண்கள் வேறுமத ஆண்களை மணந்துகொண்டால் அவர்களை பார்ஸிகளின் கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது ஆகிய பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் தொடர்பான மனுக்களையும் அரசியல் சாசன அமர்வு இன்று முதல் விசாரிக்கிறது.


First published: January 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading