சபரிமலை தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு

சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு செய்ய தேவசம் போர்டு முடிவெடுத்துள்ளது.

சபரிமலை தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு
சபரிமலை
  • News18
  • Last Updated: October 19, 2018, 5:24 PM IST
  • Share this:
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக போராட்டங்கள் மிகவும் வலுத்த நிலையில், தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவெடுத்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நேற்று முன் தினம் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதை அடுத்து, பல பெண் பத்திரிகையாளர்கள், பெண் உரிமை ஆர்வலர்கள் கோவிலுக்குள் செல்ல முயன்றனர்.

சபரிமலை தீர்ப்புக்கு எதிராக பிரம்மாண்ட பேரணிஆனால், பக்தர்களின் எதிர்ப்பு, சில அமைப்புகளின் தாக்குதலுக்கு உள்ளான அவர்கள் தங்களது முயற்சியை கைவிட்டு திரும்பினர். சபரிமலை பகுதியில் கடந்த 3 நாட்களாக அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், இவ்விவகாரத்தில் முடிவெடுக்க கோவிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டுக்கு முழு சுதந்திரம் அளிப்பதாக அம்மாநில அரசு கூறியது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு சீராய்வு செய்வது தொடர்பாக தேவசம் போர்டு இன்று கூடி ஆலோசனை நடத்தியது. கூட்டத்தில், தீர்ப்பை மறு சீராய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றம்
இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தேவசம் போர்டு தலைவர் பத்ம குமார், “கடந்த 3 நாட்களில் நடந்த நிகழ்வுகளை நீதிமன்றத்தில் தெரிவிப்போம். சபரிமலை பகுதியை கலவர பூமியாக்க அனுமதிக்க முடியாது.” என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்:

சபரிமலைக்கு சென்ற பெண்கள் சன்னிதானம் முன்பு தடுத்து நிறுத்தம்

சபரிமலை போராட்டம்: போலீசின் தடியடியும்... வன்முறையும்... - புகைப்படத் தொகுப்பு
First published: October 19, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்