சபரிமலை விவகாரம் - ஜனவரியில் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை

சபரிமலை விவகாரம் - ஜனவரியில் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை
சபரிமலை (கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: December 22, 2019, 11:58 AM IST
  • Share this:
சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை ஜனவரி மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதித்து உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து பந்தளம் அரண்மனை நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சார்பில் 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை தலைமை நீதிபதி தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.


அதேநேரத்தில் பெண்களை அனுமதிக்கும் முந்தைய தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இந்நிலையில் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை ஜனவரி மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
First published: December 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading