Home /News /national /

சபரிமலை நடை திறப்பு - கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

சபரிமலை நடை திறப்பு - கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

சபரிமலை

சபரிமலை

சபரிமலையில் கடந்த 2 ஆண்டுகளாக அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது. இதனால் நேற்று நடை திறக்கப்பட்ட முதல் நாளிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala | Tamil Nadu
    புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

    கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் புரட்டாசி மாத பூஜைகள் நேற்று முதல் தொடங்கியது. இதையொட்டி நேற்றைய தினம் கோவில் நடையை திறந்து மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி தீபாராதணை காட்டினார். தொடர்ந்து இன்று முதல் வரும் 21ஆம் தேதி வரை சபரிமலையில் தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறும் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மற்றும் நிலக்கல் பகுதியில் உடனடி தரிசன முன்பதிவு வசதி மூலமும் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர்.

    வரும் 21ஆம் தேதி வரை பக்தர்களின் தரிசனத்திற்காக கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும் என்றும், அன்று இரவு 10 மணிக்கே சிறப்பு பூஜைகள் முடிந்த பிறகு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படவுள்ளதாகவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    ALSO READ | ’நீண்ட ஆயுளை பெற்று வாழ வேண்டும்...’  மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஸ்டாலின்! 

    ஆன்லைன் மூலமே தரிசனத்திற்கு பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் ஆர்வமாக முன்பதிவு செய்து சாமியை தரிசிக்கின்றனர்.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Ayyappan temple in Sabarimala, Kerala, Kerala. Sabarimala

    அடுத்த செய்தி