சபரிமலை ஐயப்பன் ஆலயத்துக்கு, கூடுதல் பக்தர்களை அனுமதிக்கக் கோரிய வழக்கில், தினந்தோறும் ஐந்தாயிரம் பக்தர்களை அனுமதிக்கலாம் என கேரள உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. இதனைதொடர்ந்து பக்தர்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த சூழலில், நேற்று மாலை ஆறு மணி முதல் , அதற்கான ஆன்லைன் முன்பதிவு சபரிமலைக்கான இணையதளத்தில் தொடங்கியது.
மேலும் பக்தர்கள் கோயிலுக்கு வருவதற்கு, 24 மணிநேரத்துக்குள் சோதனை செய்த கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் வரும் 26-ம் தேதிக்கு பிறகு, 48 மணி நேரத்துக்குள் சோதனை செய்த கொரோனா நெகடிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வார நாட்களில் இரண்டாயிரம் பக்தர்களும், வார இறுதி நாட்களில் 3 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Kerala: Travancore Devasom Board to start the Virtual Q booking for Sabarimala devotees from 6 pm today. A total of 5000 people will be allowed to visit the temple on a single day. RT-PCR COVID19 negative test certificate mandatory for devotees to visit the shrine from Dec 26.