சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிசம்பர் 26ம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14ம் தேதி மகரவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, சுவாமிக்கு தீபாராதனை நடக்கிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை பக்தர்கள் கட்டாயம் கொண்டு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பம்பை திருவேணியில் பக்தர்கள் குளிப்பதற்காக குளியலறைகள் கட்டப்பட்டுள்ளன. வார நாட்களில் ஆயிரம் பேரும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டாயிரம் பேரும், மகர விளக்கு பூஜையன்று ஐந்தாயிரம் பக்தர்களும், சன்னிதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதையொட்டி இன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் உள்ள ஆழியில், மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி தீ மூட்டுவார்.
மறுநாளான நாளை கார்த்திகை 1 அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். பின்னர் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Vaijayanthi S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.