சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடைதிறப்பு.. நாளை முதல் நாள்தோறும் 250 பேருக்கு மட்டுமே அனுமதி..

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக இன்று நடை திறக்கப்படுகிறது. தினமும் 250 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடைதிறப்பு.. நாளை முதல் நாள்தோறும் 250 பேருக்கு மட்டுமே அனுமதி..
(கோப்புப் படம்)
  • Share this:
மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது. நாளை முதல் 5 நாட்களுக்கு 250 பக்தர்கள் வீதம் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், தொற்று பரவல் காரணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாளில் எந்த வித சிறப்பு பூஜையும் நடைபெறாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும், தனிமனித இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்.. வீதி உலா நிகழ்வு ரத்து..


மேலும் வடசேரிகரா மற்றும் எருமேலி வழியாக மட்டுமே, சபரிமலைக்கு செல்ல முடியும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
First published: October 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading