சபரிமலையில் 144 தடை உத்தரவு: மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு

சபரிமலையில் 144 தடை உத்தரவு: மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு
சபரிமலை அடிவாரத்தில் குவிக்கப்பட்டுள்ள காவல் துறையினர்.
  • News18
  • Last Updated: October 20, 2018, 8:21 AM IST
  • Share this:
சபரிமலையில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் சன்னிதானம், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என கடந்த மாதம் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானது . அதன் பிறகு முதன் முறையாக பூஜைக்காக சபரிமலை நடை கடந்த 17-ம் தேதி திறக்கப்பட்டது. சபரிமலைக்கு செல்லும் வழியில் உள்ள நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் வாகனங்களை மறித்து பெண்கள் வருகிறார்களா என சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், இந்து அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தத்தால், போராட்டக்காரர்களும் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால், நிலக்கல் பகுதியே போர்களமாக மாறியது. இதை தொடர்ந்து, பத்தினம் திட்டா மாவட்ட ஆட்சியர் நூஹ், நிலக்கல், பம்பை , சன்னிதானம், இலவங்கல் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.

காரில் பெண்கள் இருக்கிறார்களா என சோதனை செய்யும் இந்து அமைப்பு பெண்கள்இந்நிலையில், நேற்று கவிதா ஜக்கல் என்ற பெண் பத்திரிகையாளரும், கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரெஹானா ஃபாத்திமாவும் போலீசாரின் கவச பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்றனர். ஆனால், இந்து அமைப்பினரின் போராட்டம் காரணமாக, இரண்டு பெண்களையும் சன்னிதானத்திலிருந்து 500 மீட்டர் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டனர். எதிர்ப்பு அதிகமாக இருந்த நிலையில், அவர்கள் மீண்டும் பாதுகாப்பாக பம்பை அழைத்து வரப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் அங்கு மீண்டும் பதற்றமான சூழல் உருவானது.

கலைந்து ஓடும் போராட்டக்காரர்கள்.


இதைத் தொடர்ந்து 144 தடை உத்தரவை நீட்டிக்க வேண்டும் என போலீசார் வைத்த கோரிக்கையின் பேரில், பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் ஆகிய பகுதிகளில் 3 நாட்களுக்கு144 உத்தரவு அமலில் இருக்கும் என பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியர் நூஹ் அறிவித்துள்ளார்.இதனிடையே, மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக, கேரள தேவசம் போர்டின் ஆலோசனைக் கூட்டம் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் பத்மகுமார், போராட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். இதேபோன்ற ஒரு அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பைக்கில் ஊர்வலம் செல்லும் ஐயப்ப பக்தர்கள்.


சபரிமலை விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் கேரள உயர்நீதிமன்றமே விசாரித்துள்ளது. இதனால் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் விதிகளின்படி தற்போதைய விவகாரம் குறித்தும் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம். அமைதி பூமியான சபரிமலையை கலவர பூமியாக மாற்றுவதை ஏற்க முடியாது எனக் கூறிய அவர், முதலமைச்சரை சந்தித்துப் பேசவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
First published: October 20, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்