Home /News /national /

கால்நடைகளை விட குறைவான விலைக்கு குழந்தைகள் கடத்தப்பட்டு விற்பனை - நோபல் பரிசு பெற்ற சத்யார்த்தி வேதனை

கால்நடைகளை விட குறைவான விலைக்கு குழந்தைகள் கடத்தப்பட்டு விற்பனை - நோபல் பரிசு பெற்ற சத்யார்த்தி வேதனை

கைலாஷ் சத்யார்த்தி

கைலாஷ் சத்யார்த்தி

உலகில் கால்நடைகளை விட குறைவான விலைக்கு குழந்தைகள் கடத்தப்பட்டு, விற்கப்படும் அவலம் நிகழ்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
கோவிட்-19 தொற்றுநோய், புவி வெப்பமயமாதல், எரிபொருள் மற்றும் உணவு நெருக்கடி, ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி போன்ற பல காரணிகள் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளின் வாழ்க்கையை கடினமாக்கியுள்ளன என்று நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி தெரிவித்தார்.

விசாகப்பட்டினத்தில் உள்ள காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மென்ட் பல்கலைக்கழகத்தில் 42வது அறக்கட்டளை தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சத்யார்த்தி குழந்தைகளின் நிலை குறித்து பேசினார்.

கொரோனா தொற்று இன்னும் குறையவில்லை. ஏற்கனவே எரிபொருள் நெருக்கடி, உணவு நெருக்கடி, புவி வெப்பமடைதல் என சில நெருக்கடிகள் உள்ளன. இது குழந்தைகளை உலகளவில் நீண்டகால வறுமையில் தள்ளியுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த ஆண்டு தொடங்கிய ரஷ்யா உக்ரைன் போர் மேலும் 40-45 மில்லியன் குழந்தைகளை நீண்டகால வறுமைக் நிலைக்குத் தள்ளியுள்ளது”என்று சத்யார்த்தி கூறினார்.

உலகில் கால்நடைகளை விட குறைவான விலைக்கு குழந்தைகள் கடத்தப்பட்டு, விற்கப்படும் அவலம் நிகழ்கிறது. அதோடு, கோவிட்-19 தொற்றுநோய் எவ்வாறு மக்கள் வாழ்வாதாரம் மற்றும் குழந்தைகளின் இழப்பிற்குக் காரணமானது  என்பதை விரிவாகக் கூறினார். குழந்தை திருமணம் போன்ற மோசமான சமூக தீமைகள் இன்னும் சில இடங்களில் நடைமுறையில் உள்ளது.

தமிழகத்தில் சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டியது அம்பலம்

கொரோனா காலகட்டத்தில் வேலைகளை இழந்து வீடு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் சிலரது குழந்தைகள்  தொழிலாளர், கடத்தல், அடிமைத்தனம் மற்றும் குழந்தைத் திருமணங்களுக்கு உட்பட்டு பாதிக்கப்படுகின்றனர். நான் தனிப்பட்ட முறையில் பல குழந்தைகளையும் அவர்களின் தந்தைகளையும் சந்தித்து பேசினேன். 'வேறு வழியில்லாததால் எங்கள் மகளுக்கு 12 வயதில் திருமணம் செய்து வைக்க விரும்பினோம். இப்போதும் குறைந்த பட்சம், சிறியவர்களுக்காக வீட்டில் கொஞ்சம் உணவையாவது சேமிக்க முயற்சிக்கிறோம் என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர். இது ஒரு உலகளாவிய பிரச்சினை. இந்தப் பிரச்சினையை சவாலுக்கு உட்படுத்தி, இரக்க உணர்வுடன் தீர்க்க வேண்டும், ”என்று சத்யார்த்தி கூறினார்.

நம்மிடம் உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரங்கள், சந்தைகள், உற்பத்தி விநியோகச் சங்கிலிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளது. ஆனால் இந்தியா அதன் முக்கிய மதிப்பான இரக்கத்தை உலகமயமாக்குவதற்கு ஒரு முன்னோடியாக இருக்க வேண்டிய நேரம் இது. இரக்கம் என்பது பிறர் துன்பத்தைத் தன் துன்பமாக உணர்வது.

இதன் பொருள் பிறரது பிரச்சினைகளை யோசனைகத்து அதற்கான தீர்வுகளைக் கண்டறிய வேண்டும் என்பதே ஆகும். இந்த உலகில் மிகவும் மென்மையான குணம் படைத்தவர்கள் குழந்தைகள். உலகில் ஏற்படும் மாற்றங்களால் முதலில் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள். அவர்களது சிரமங்களை போக்கும் வழிகளை பெரியவர்களாகிய நாம் தான் மேற்கொள்ள வேண்டும். நாட்டின் அரசின் முக்கியக் கடமை இது என்று சத்யார்த்தி கூறினார்
Published by:Ilakkiya GP
First published:

Tags: Children, Noble price

அடுத்த செய்தி