உக்ரைன் நாட்டில் ரஷ்யா ராணுவத் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில் அங்குள்ள சுமார் 22 ஆயிரம் இந்தியர்களின் நிலைமை குறித்த கவலை எழுந்துள்ளது.
கல்வி, வேலை மற்றும் வர்த்தகம் தொடர்பாக சுமார் 22 ஆயிரம் இந்தியர்கள் உக்ரைனில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கிருந்து இந்தியா திரும்புவதற்கு விமான சேவை ஏதும் இயக்கப்படவில்லை.
உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் தங்களது விபரங்களை இந்திய தூதரகத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இருப்பினும் பெரும்பாலானோர் தங்களது விபரங்களை அளிக்கவில்லை என்று தகவல் தெரியவந்துள்ளது. உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை விமானப்படை மூலம் மீட்கவும் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், அங்கிருக்கும் சூழல் குறித்து இந்திய தூதரகம் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-
உக்ரைனில் தற்போது நிலைத்தன்மையற்ற, எது வேண்டுமானாலும் நடக்கும் சூழல் நிலவுகிறது. எனவே, இங்குள்ள இந்தியர்கள் அமைதி காத்து, பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். வீடுகள், விடுதிகள், தங்குமிடங்கள் மற்றும் பயணத்தில் இருப்போர் தங்களது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளளவும்.
இதையும் படிங்க -
War In Ukraine LIVE Updates: 5 ரஷ்ய விமானங்கள், ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தினோம்- உக்ரைன் அறிவிப்பு
மேற்கு உக்ரைன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தலைநகர் கீவிற்கு இந்தியர்கள் வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் அனைவரும் தற்காலிகமாக, தாங்கள் இருந்த பகுதிக்கே திரும்பிச் சென்றுவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். குறிப்பாக உக்ரைனின் மேற்கு எல்லைப் பகுதிக்கு செல்வதன் மூலம் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். முக்கிய தகவல்களை இந்திய தூதரகம் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தற்போது, உக்ரைனில் தங்கியுள்ள இந்தியர்களுக்கு உதவ வெளியுறவுத்துறை அமைத்துள்ள 24×7 உதவி மைய எண்கள்
1800118797
+91 11 23012113
இதையும் படிங்க -
Ukraine-Russia War:உக்ரைனில் துப்பாக்கிக் கடைகளில் விற்பனை ஜோர்- ரஷ்யாவை எதிர்க்க மக்களே ஆயுதம் ஏந்துகின்றனர்
+91 11 23014104
+91 11 23017905 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, உக்ரைனில் வசிக்கும் தமிழர்கள் தனது மின்னஞ்சலை தொடர்பு கொள்ளுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் புதுவை அப்துல்லா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ''உக்ரைன் போர் சூழலில் உதவி தேவைப்படும் தமிழர்களுக்கு இந்தியத் தூதரகம் வழியாக விரைந்து உதவிடும்படி மாண்புமிகு முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். எனவே உதவி தேவைப்படும் உக்ரைன் வாழ் தமிழர்கள் தொடர்பு கொள்க : mm.abdulla@sansad.nic.in'' என்று கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.