Home /News /national /

உக்ரைனில் நில எல்லை வழியாக இந்தியர்களை மீட்பதற்கு வெளியுறவு அமைச்சகம் முயற்சி

உக்ரைனில் நில எல்லை வழியாக இந்தியர்களை மீட்பதற்கு வெளியுறவு அமைச்சகம் முயற்சி

இந்தியர்களை இங்கிருந்து எப்படி வெளியேற்றுவது என்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். நில எல்லை வழியாக உக்ரைனின் அண்டை நாடுகளின் வழியே இந்தியர்களை கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    ரஷ்யா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து வான்வெளியை உக்ரைன் மூடிய நிலையில், அங்குள்ள இந்தியர்களை நிலப்பகுதி வழியாக மீட்பதற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் முயற்சி மேற்கொண்டுள்ளது.

    இதற்காக வெளியுறவுத்துறை அதிகாரிகள், உக்ரைனின் எல்லைப் பகுதியில் முகாமிட்டுள்ளனர். ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக் குடியரசு, ரொமேனியா ஆகிய நாடுகள் உக்ரைன் எல்லையில் அமைந்துள்ளன. மீட்பு பணி தொடர்பாக இந்த நாட்டில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

    உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேற விருப்பம் உடையவர்கள் வெளியுறவுத்துறை மற்றும் உக்ரைனில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக உக்ரைனுக்கான இந்திய தூதர் பார்த்த சத்பாதி கூறியதாவது-

    உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள இந்திய தூதரகம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியிருப்பது இங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது. இங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாங்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். எனவே இந்தியர்கள் பொறுமை காத்து, பாதுகாப்புடன் இருக்க வேண்டும். இந்திய தூதரகத்துடன் அவர்கள் தொடர்பில் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அவர்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.

    இதையும் படிங்க - ''உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்திக் கொள்ள ரஷ்யாவை இந்தியா வலியுறுத்த வேண்டும்'' : காங்கிரஸ் வலியுறுத்தல்

    இந்தியர்களை இங்கிருந்து எப்படி வெளியேற்றுவது என்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். நில எல்லை வழியாக உக்ரைனின் அண்டை நாடுகளின் வழியே இந்தியர்களை கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க - தொடங்கியது போர் : உக்ரைனில் இருக்கும் இந்தியர்களின் நிலை என்ன?

    தற்போதைய சூழலில் இன்னும் சில காலத்திற்கு போர் நீடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மத்திய வெளியுறவு அமைச்சகம் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுத்து வரும் சூழலில், உக்ரைன் கள நிலவரம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

    இதற்கிடையே, ரஷ்யாவுடன் உக்ரைன் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
    Published by:Musthak
    First published:

    Tags: Russia - Ukraine

    அடுத்த செய்தி