Home /News /national /

தமிழக மாணவர்களை மீட்பது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் தமிழக அரசின் சிறப்புக்குழு சந்திப்பு

தமிழக மாணவர்களை மீட்பது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் தமிழக அரசின் சிறப்புக்குழு சந்திப்பு

குண்டுவெடிப்புகளுக்கு இடையே மாணவர்களை அழைத்து வருவது என்பது பாதுகாப்பானது இல்லை. இதன் காரணமாக, மாணவர்கள் அழைத்து வராமல் வைக்கப்பட்டுள்ளனர்.

குண்டுவெடிப்புகளுக்கு இடையே மாணவர்களை அழைத்து வருவது என்பது பாதுகாப்பானது இல்லை. இதன் காரணமாக, மாணவர்கள் அழைத்து வராமல் வைக்கப்பட்டுள்ளனர்.

குண்டுவெடிப்புகளுக்கு இடையே மாணவர்களை அழைத்து வருவது என்பது பாதுகாப்பானது இல்லை. இதன் காரணமாக, மாணவர்கள் அழைத்து வராமல் வைக்கப்பட்டுள்ளனர்.

    உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை விரைந்து மீட்கும் வகையில், வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கரை, தமிழக அரசின் சிறப்புக்குழுவினர் இன்று சந்தித்து பேசினர்.

    உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க, தமிழக அரசு குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இந்தக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குழுவினர் டெல்லியில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கரை சந்தித்து, உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர்கள் கூறியதாவது-

    உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நீண்ட நேரம் விளக்கினார். உக்ரைனுக்குள் எத்தனை மாணவர்கள் சிக்கியுள்ளனர், எல்லைப் பகுதியில் எத்தனை மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்பது குறித்த விபரங்களை நாங்கள் வைத்திருந்தோம்.

    இதையும் படிங்க - ரஷ்யாவின் அடுத்த இலக்கு இதுதான்... உக்ரைனை உஷார் படுத்திய எலான் மஸ்க்!

    வெளியுறவு அமைச்சரும் இதுபோன்ற தகவல்களை வைத்திருந்தார். நாங்கள் வைத்திருந்த தகவல்களை அவரிடம் அளித்தோம். 2, 263 மாணவர்கள் அங்கு இருப்பதாக தகவல் உள்ளது. அவர்களில், 717 பேர் இந்தியா திரும்பியுள்ளனர்.

    கீவ் நகரில் முன்கூட்டியே சண்டை நிறுத்தம் செய்யப்பட்டதால் அங்கிருந்து மாணவர்கள் பலர் பாதுகாப்பான முறையில் வெளியேற்றம் செய்யப்பட்டனர். தற்போது சுமி நகரில் மாணவர்கள் சிக்கியுள்ளாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களை மீட்க ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது.

    இதையும் படிங்க - மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்தியது ரஷ்யா...

    குண்டுவெடிப்புகளுக்கு இடையே மாணவர்களை அழைத்து வருவது என்பது பாதுகாப்பானது இல்லை. இதன் காரணமாக, மாணவர்கள் அழைத்து வராமல் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஏதாவது ஓர் ஏற்பாடு செய்யப்பட்டு, உணவு உள்ளிட்ட தேவைகள் நிறைவேற்றி வைக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Russia - Ukraine

    அடுத்த செய்தி