ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஆதார் இருந்தால் ரூ.4.78 லட்சம் கடனுதவி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்... உண்மை என்ன?

ஆதார் இருந்தால் ரூ.4.78 லட்சம் கடனுதவி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்... உண்மை என்ன?

ஆதார்

ஆதார்

ஆதார் வைத்திருந்தால் இதிலெல்லாம் சலுகைகள் வழங்கப்படும் என்று பல செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. அது போலவே இந்த கடன் தரும் செய்தியும் பரவியது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் கடன் வழங்குவதாக பிரதமர் மோடியுடன் கூடிய அறிவிப்பு படம் ஒன்று சமூக ஊடகங்களில் தீயாக பரவியது.

  நாட்டில் ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு தலா 4,78,000 ரூபாயை மத்திய அரசு கடனாக வழங்க இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார் என்ற  தகவல் இணையத்திலும், சமூக ஊடகங்களிக்கும் பரவி வருகிறது. அனால் இதில் உண்மையில்லை என்று பிஐபி விளக்கம் அளித்துள்ளது.

  ஆதார் அட்டை குறித்த பல சர்ச்சைகள் ஏற்கனவே சமூகத்தில் இருந்து வரும் நிலையில் இந்த வதந்தியும் அதோடு சேர்ந்துள்ளது. ஆதார் வைத்திருந்தால் இதிலெல்லாம் சலுகைகள் வழங்கப்படும் என்று பல செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. அது போலவே இந்த கடன் தரும் செய்தியும் வெளியிடப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க: கோவா சொகுசு வீடு.. சிக்கலில் மாட்டிய யுவராஜ் சிங்.. விளக்கம் கேட்டு நோட்டீஸ்!

  பிஐபியின் உண்மை அறியும் சமூக ஊடகப் பக்கம், இதுபோன்ற பல தவறான தகவல்ககளை விளக்கங்களுடன் பதிவிட்டு வருகிறது. இதுபோன்ற ஒரு தகவல் கடந்த ஆகஸ்ட் மாதமும் பரவியது. அப்போதும் இந்தப் பக்கத்தில் அதுபொய்யானது என்று விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

  தற்போது எழுந்துள்ள இந்த தகவல் முற்றிலும் தவறானது. இதில் துளியும் உண்மையில்லை என்று பிஐபி தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.

  தவறான தகவல் இணையதளங்களில் பரவி வருவதாகவும், அது உண்மையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. தயவுகூர்ந்து இதுபோன்ற பொய்யான தகவல்களை மக்கள் யாரும் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்றும், இதுபோன்ற புரளிகளைப் பரப்புவதும் குற்றம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Aadhar, BJP, Fake News