ஆந்திராவில் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கிய பதவி, பறிபோன காரணத்தால் ஆளுங்கட்சி பிரமுகர் செல்பி வீடியோ பதிவேற்றம் செய்து தற்கொலை செய்துள்ளார்.
சித்தூர் மாவட்டம் குப்பம் நகரை சேர்ந்த ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகர் பார்த்தசாரதி. இவர் அங்குள்ள கங்கம்மா ஆலய கமிட்டி தலைவராக இருந்து வந்தார்.
இருந்த நிலையில் திடீரென்று பதவி நீக்கம் செய்யப்பட்ட அவர் நேற்று செல்பி வீடியோ ஒன்றை பதிவு செய்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
அந்த வீடியோவில் ''ஆலய கமிட்டி தலைவர் பதவியைப் பெறுவதற்காக சொந்த கட்சி பிரமுகர்களுக்கு 15 லட்ச ரூபாயும், கோவில் கமிட்டி அமைப்பதற்கு 10 லட்ச ரூபாயும், ஆலய சீரமைப்பு பணிகளுக்காக 10 லட்ச ரூபாயும் ஆக மொத்தம் 35 லட்ச ரூபாய் செலவு செய்தேன்.
இதையும் படிங்க - டெல்லியில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு!
இந்த நிலையில் என்னை திடீரென்று பதவி நீக்கம் செய்து விட்டனர் . நடப்பு ஆண்டில் நடைபெற இருக்கும் கோவில் திருவிழாவிற்கு பின் நானே பதவியிலிருந்து விலகுகிறேன் என்று கூறினேன்.
ஆனால் என்னுடைய பேச்சை கேட்காமல் என்னை பதவி நீக்கம் செய்து விட்டனர். இது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க - ‘கால்பாய் வேலை மோசடி’... ரூ.17 லட்சத்தை இழந்த வேலையில்லா பட்டதாரி!!
என்னுடைய தற்கொலைக்கு நிருபர்கள் 2 பேர், ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் ஆகியோரே காரணம்'' என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட பார்த்தசாரதி உடலை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் வெளியிட்டுள்ள செல்பி வீடியோ ஆதாரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறிய கோவிலான குப்பம் கங்கம்மா கோவில் கமிட்டி தலைவர் பதவிக்கு ஒருவர் 35 லட்ச ரூபாய் செலவு செய்தேன் என்று குறிப்பிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் - புஷ்பராஜ்
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.