முதல்வர் வேட்பாளர் கேட்டு கோஷம்போட்ட என்.ஆர்.காங்கிரஸார்- பா.ஜ.க தொகுதி பங்கீட்டின்போது பரபரப்பு

முதல்வர் வேட்பாளர் கேட்டு கோஷம்போட்ட என்.ஆர்.காங்கிரஸார்- பா.ஜ.க தொகுதி பங்கீட்டின்போது பரபரப்பு

என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க தொகுதி ஒப்பந்தம்

முதலமைச்சர் வேட்பாளரைக் கேட்டு என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால் பா.ஜ.க, என்.ஆர்.காங்கிரஸ் தொகுதி பங்கீட்டின் போது பரபரப்பு ஏற்பட்டது.

  • Share this:
    புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கூட்டணிகள் முடிவுபெறாமல் இருந்தது. பா.ஜ.க, என்ஆர்.காங்கிரஸ் இடையே முதலமைச்சர் வேட்பாளர், தொகுதி பங்கீடு போன்ற சிக்கலால் இழுபறி நீடித்து வந்தது. அதனால், கூட்டணி முறிந்துவிடும் என்ற நிலைக்கும் சென்றது. ஆனால் தொடர்ந்து இருதரப்பினரும் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க, அ.தி.மு.கவுக்கு 14 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும், முதல்வர் வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படாமல் உள்ளது. தொகுதி பங்கீடு அறிவிப்பு முடிந்தவுடன் முதலமைச்சர் வேட்பாளர் யார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் சுரானா, தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் முடிவு செய்வார்கள் என்று கூறினார். இதற்கு பின்னால் நின்றிருந்த என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கும்படி கோஷம் எழுப்பினார்கள்.

    இதற்கு ரங்கசாமி கடுமையான எச்சரிக்கைவிடுத்தார். இது மாதிரி பேசுவது தவறு. உங்களை உள்ளே விட்டது தவறு என கூறி கண்டித்தார். இதனிடையே பாஜகவினர் "பாரத் மாதாக்கே ஜே" என எதிர் கோஷம் எழுப்பினார்கள்.. இதனால் செய்தியாளர் சந்திப்பில் சில நிமிடங்கள் சலசலப்பு காணப்பட்டது. இந்த நிகழ்வில் பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: