ஆர்.எஸ்.எஸ்.தான் மத்திய அரசை இயக்கி வருகிறது - ராகுல் காந்தி

news18
Updated: February 14, 2018, 8:51 AM IST
ஆர்.எஸ்.எஸ்.தான் மத்திய அரசை இயக்கி வருகிறது - ராகுல் காந்தி
தொண்டர்களிடம் கைகுலுக்கும் ராகுல் காந்தி
news18
Updated: February 14, 2018, 8:51 AM IST
‘ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் மத்திய அரசை இயக்கி வருகிறது. அரசின் அனைத்து துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் உள்ளனர்’ என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராகுல் காந்தி அங்கு பேருந்து மூலம் சுற்றுப்பயணம் செய்து கட்சிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்நிலையில், அவர் பொதுமக்களிடையே இன்று பேசியதாவது: மத்திய அரசை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் இயக்கி வருகிறது. அரசின் ஒவ்வொரு துறையிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் உள்ளனர். அமைச்சகங்களின் செயலாளர்களை நியமிப்பதும்  ஆர்.எஸ்.எஸ். தான்.

உண்மையில் பண மதிப்பிழப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என முடிவடுத்தது ரிசர்வ் வங்கியல்ல, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான்.

நிதி ஆயோக் அமைப்பிலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் உள்ளனர். அரசு நிறுவனங்கள் என்பவை எந்தவொரு கட்சிக்கும், சித்தாந்தத்துக்கும் சொந்தமானதல்ல என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஜிஎஸ்டி-யை குறைப்போம்: 2019- மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் சிக்கலான ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை திருத்தி அமைக்கப்படும். தற்போது  ஜிஎஸ்டி வரி மிக அதிகமாக உள்ளது. அதை நாங்கள் குறைப்போம் என்றார் ராகுல் காந்தி.
First published: February 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...