• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இந்தியாவைக் கைப்பற்ற முயற்சிக்கும் அமேசான் நிறுவனம் 2வது கிழக்கிந்திய கம்பெனி: சாடிய ஆர்.எஸ்.எஸ். பத்திரிகை

இந்தியாவைக் கைப்பற்ற முயற்சிக்கும் அமேசான் நிறுவனம் 2வது கிழக்கிந்திய கம்பெனி: சாடிய ஆர்.எஸ்.எஸ். பத்திரிகை

அமேசான்

அமேசான்

அக்டோபர் 3ம் தேதி வெளியாகும் ஆர்.எஸ்.எஸ். சார்பு வாராந்திர இதழான பஞ்சஜன்யா தன் கட்டுரை ஒன்றில் அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை 2ம் கிழக்கிந்திய கம்பெனி என்று வர்ணித்து சாடியுள்ளது.

  • Share this:
    தங்களுக்குச் சாதகமாக அரசுகள் கொள்கைகளை வகுக்க அமேசான் நிறுவனம் கோடிக்கணக்கான ரூபாய்களை லஞ்சமாக கொட்டிக் கொடுக்கிறது என்று பஞ்சஜன்யா சாடியுள்ளது. அக்டோபர் 3ம் தேதி வெளிவரும் இந்த இதழின் கவர் ஸ்டோரியே அமேசானை வெளுத்து வாங்கி கடும் விமர்சனம் செய்த கட்டுரைதான். இந்த கட்டுரையின் தலைப்பே "East India Company 2.0" என்று கொடுக்கப்பட்டுள்ளது.

    அதாவது, “18ம் நூற்றாண்டில் இந்தியாவையே தங்கள் காலடியின் கீழ் கொண்டு வர பிரிட்டனின் கிழக்கிந்திய கம்பெனி என்ன செய்ததோ அதைத்தான் அமேசான் இப்போது செய்து வருகிறது” என்று அந்தக் கட்டுரை கூறுகிறது. அமேசான் இந்தியாவில் சந்தையை ஏகபோக உரிமையாக்கப் பார்க்கிறது. இதை அடைவதற்காக, இந்திய குடிமக்களின் ‘பொருளாதார, அரசியல், சொந்த சுதந்திரத்தை பறிமுதல் செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டுவருகிறது’ என்று கடுமையாக சாடியுள்ளது.

    அமேசான் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நடைமேடையான பிரைம் வீடியோ தளத்தில் இந்தியப் பண்பாட்டுக்கு எதிரான திரைப்படங்கள், சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது என்று விமர்சனம் வைத்துள்ளது பஞ்சஜன்யா. நிறைய ப்ராக்சி நிறுவனங்களை அமேசான் உருவாக்குவதோடு தங்களுக்குச் சாதகமாக அரசுக் கொள்கைகள் அமைய கோடிக்கணக்கில் லஞ்ச லாவண்யங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்கிறது இந்தக் கட்டுரை.

    பியூச்சர் குழுமத்தை வாங்குவதில் சட்ட வழக்கை அமேசான் சந்தித்து வருகிறது. இந்திய போட்டி ஆணையத்தின் விசாரணையிலும் அமேசான் சிக்கியுள்ளது. இந்தியாவில் அமேசான் குழுமத்தின் சட்டப் பிரதிநிதிகள் லஞ்சம் கொடுத்ததான விவகாரத்தை அமேசானே விசாரித்து வருகிறது. 2018-20-ல் மட்டும் தங்களை தக்கவைக்க அமேசான் நிறுவனம் ரூ.8,456 கோடி ரூபாயை சட்டச் செலவுகளாக மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

    Also Read: CSK vs KKR IPL 2021: சில சமயங்களில் நன்றாக ஆடாமலேயே வெற்றி பெறுகிறோம்: தோனி

    காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்ற கண்காணிப்பு விசாரணை கோரியுள்ளது. முன்னதாக ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான சுதேசி ஜாக்ரன் பத்திரிகையும் இந்திய சட்டங்களையும் சந்தை விதிகளை மீறியும் அமேசான் செயல்பட்டு வருகிறது என்றும் இது இந்திய வியாபாரிகளுக்க் ஊறு விளைவிக்கும் செயல் என்றும் அறமற்ற வர்த்தகக் கொள்கைகளை அமேசான் கடைப்பிடித்து வருகிறது என்றும் சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: