அரசியல் சாசனச் சட்டம், மதச் சுதந்திரம் மற்றும் மதச்ச்சார்பின்மை என்ற பெயரில் இந்துக்களையும் இந்து மதத்தையும் தொடர்ந்து அவமதிப்பது நடந்து வருகிறது என்று ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (RSS) கூறியுள்ளது.
மேலும் நாம் இந்துக்களே அல்ல என்று கூறி இந்துக்களிடையே பிளவு ஏற்படுத்தவும் சில சக்திகள் சதிவேலை செய்து வருவதாகவும் ஆர்.எஸ்.எஸ். குற்றம் சாட்டியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அகில பாரத பிரதிநிதி சபா எனப்படும், தேசிய பொதுக் குழுவின் மூன்று நாள் கூட்டம், குஜராத் மாநிலம், ஆமதாபாதில் நடக்கிறது. கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் மேலும் கூறும்போது, “நாட்டில், பிரிவினை சக்திகளின் சவால்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. அரசியல் சட்டம், மதசுதந்திரம் என்ற பெயரில் மதவெறி அதிகரித்து வருகிறது. கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், ஹிந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் அதிகளவில் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கு உதாரணம். மதச்சார்பின்மை என்ற போர்வையில், ஹிந்துக்களின் நம்பிக்கைகளை அவமதிக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது. ஹிந்துக்களை பிரிக்க பல்வேறு சூழ்ச்சிகள் நடக்கின்றன. ஒரு பிரிவினரிடம், 'நீங்கள் ஹிந்துக்கள் இல்லை' என தொடர்ந்து பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. தமிழ்நாடு, பஞ்சாப், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், ஹிந்துக்களை மதமாற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன.
அரசு இயந்திரத்தில் நுழைவதற்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் விரிவான திட்டங்கள் இருப்பதாகத் தெரிகிறது. இதற்கெல்லாம் பின்னால் நீண்ட கால இலக்கு கொண்ட ஆழமான சதி வேலை செய்வதாகவே தெரிகிறது. எண்ணிக்கையின் பலத்தின் அடிப்படையில், அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்கு எந்த வழியையும் பின்பற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பஞ்சாப், கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் போன்ற நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்துக்களின் திட்டமிட்ட மதமாற்றம் பற்றிய தொடர்ச்சியான தகவல்கள் உள்ளன. இந்த சவாலுக்கு நீண்ட வரலாறு உண்டு, ஆனால், தாமதமாக, புதிய குழுக்களை மாற்றுவதற்கான புதிய வழிகள் உள்ளன. இந்து சமூகத்தின் சமூக மற்றும் மதத் தலைமைகளும் நிறுவனங்களும் ஓரளவுக்கு விழித்துக்கொண்டு இந்தப் போக்கைச் சரிக்கட்ட முனைப்புக் காட்டியிருப்பது உண்மைதான். இந்த திசையில் மிகவும் திட்டமிட்ட முறையில் கூட்டு மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்வது அவசியம் என்று தோன்றுகிறது.
சர்வதேச அளவில், இந்தியாவையும், ஹிந்துக்களையும் அவமானப்படுத்த, இந்து விரோத சக்திகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. இவற்றை முறியடிக்க, இந்து சமூகத்தில் ஒற்றுமையை மேம்படுத்த வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த பொதுக் குழு கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், பொதுச் செயலர் தத்தாத்ரேய ஹொசபலே உட்பட நாடு முழுவதிலும் இருந்து, 1,248 பிரதிநிதிகள் பங்கேற்று உள்ளனர். முன்னதாக ஆர்.எஸ்.எஸ்., இணைச் செயலர் மன்மோகன் வைத்யா கூறிய போது, ஒவ்வொரு ஆண்டும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் இணையும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அடுத்த இரண்டு ஆண்டுக்குள், அனைத்து நகரங்களிலும் ஆர்.எஸ்.எஸ்., கிளையை துவக்குவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலின் போது, மக்கள் சேவை பணிகளில், நாடு முழுதும் 5.50 லட்சம் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் ஈடுபட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mohan bahawat, RSS, RSS meeting