அது கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்து -இன்போசிஸ் விவகாரத்தில் விளக்கமளித்த ஆர்.எஸ்.எஸ்

infosys

இன்போசிஸ் விவகாரம் தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் விளக்கம் அளித்துள்ளது.

 • Share this:
  வருமான வரி கணக்கு ரிட்டர்ன்களை பெறுவதற்கு இருந்து வந்த 63 நாட்கள் எனும் காலத்தை சுருக்கி ஒரே நாளில் ரிட்டர்ன்கள் கிடைக்கச் செய்யும் வகையில் சுலபமான ஐடி போர்டல் ஒன்றை உருவாக்குவதற்காக திட்டமிட்ட மத்திய அரசு 2019ம் ஆண்டு, அந்த பணியை பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இன்போஸிஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்தது. இந்நிலையில் http://www.incometax.gov.in என்ற புதிய ஐடி போர்டல் உருவாக்கப்பட்டு கடந்த ஜூன் 7ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.

  ஆனால் இந்த போர்டலில் பல்வேறு கோளாறுகள் ஏற்பட்டதால் வரி செலுத்துவோரால் அதனை சரிவர பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதை கவனத்தில் எடுத்துக் கொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்போசிஸ் தலைமை செயல் அதிகாரியை சம்மன் அனுப்பி வரவழைத்து செப் 15ம் தேதிக்குள் கோளாறுகளை சரி செய்ய வேண்டுமென அறிவுறுத்தினார்.

  இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் சார்பு ஊடகமான பாஞ்சஜன்யா இன்றைய எடிஷனில் இது குறித்து விரிவான செய்தியை வெளியிட்டு அதில் இன்போசிஸ் நிறுவன செயல்பாட்டை கடுமையாக சாடியுள்ளது.

  இன்போசிஸ் நிறுவனம் தனது வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு இதே போல தரம் குறைந்த சேவையை வழங்குமா? இன்போசிஸ் நிறுவனம் தொடர்ந்து இந்திய பொருளாதாரத்தை முடக்க நினைக்கிறது. இதன் மூலம் சில தேச விரோத சக்திகள் இன்போசிஸுடன் கை கோர்த்து இந்த வேலைகளில் ஈடுபடுகிறதோ என சந்தேகம் எழுகிறது. பல கோடி வரி செலுத்தும் மக்களுக்கு இடர்பாடு ஏற்பட்டுள்ளது. சில போலி செய்தி வெளியிடும் இணையதளங்களுக்கு இன்போசிஸ் நிதி உதவி வழங்கியிருக்கிறது. எனவே இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இன்போசிஸ் நிறுவனம் விளக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த விவகாரம் தேசிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியது. பாஞ்சஜன்யா இதழில் வெளியான கருத்து ஆர்.எஸ்.எஸ்ஸின் கருத்தாகப் பார்க்கப்பட்டது. இந்தநிலையில், இதுதொடர்பாக ஆர்.எஸ்.எஸ் விளக்கம் அளித்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த விவகாரம் குறித்து பேசிய ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர், ’இன்போசிஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட வருமான வரித்துறை இணையத்தளத்தில் பிரச்னை உள்ளது என்பது உண்மைதான். இந்தியாவின் வளர்ச்சியில் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு முக்கியமானது. பாஞ்சஜன்யா இதழ் ஆர்.எஸ்.எஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஊடகம் கிடையாது. பாஞ்சஜன்யா இதழில் வெளிவந்த கருத்துகள் அந்த கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்துள்ளார்.
  Published by:Karthick S
  First published: