Home /News /national /

சமூக வலைத்தளங்களில் தேசிய கொடியை டிபியாக வைத்த ஆர்எஸ்எஸ்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

சமூக வலைத்தளங்களில் தேசிய கொடியை டிபியாக வைத்த ஆர்எஸ்எஸ்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

சமூக வலைத்தளங்களில் தேசிய கொடியை டிபியாக வைத்த ஆர்எஸ்எஸ்

சமூக வலைத்தளங்களில் தேசிய கொடியை டிபியாக வைத்த ஆர்எஸ்எஸ்

சுதந்திர தின கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 15ம் தேதிவரை அனைவரும் தேசிய கொடியை முகப்புப் படமாக வைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்திருந்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    நாட்டின் 75 ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதை விமரிசையாக கொண்டாட, மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, மத்திய அரசு 75 ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா என்ற பெயரில் கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்தி வருகிறது.

    இந்த சுதந்திர தின கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 15ம் தேதிவரை அனைவரும் தேசிய கொடியை முகப்புப் படமாக வைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்திருந்தார். தனது சமூக வலைத்தள பக்கங்களில் முகப்புப் படங்களையும் அவர் மாற்றினார்.

    பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று பல பிரபலங்களும் தேசிய கொடியை பிரோபைல் போட்டோக்களாக வைத்த நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பு, அதன் தலைவர்கள் நேற்று வரை தேசிய கொடிகளை பிரோபைல் போட்டோக்களாக மாற்றாமல் வைத்திருந்தனர். பாஜகவின் தாய் இயக்கமாக கருதப்படும் ஆர்எஸ்எஸ் தேசிய கொடியை வைக்காதது விவாதமாக மாறிய நிலையில், நேற்று இரவு ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள பக்கங்களின் முகப்பு படத்தை தேசிய கொடியாக மாற்றியுள்ளது.

    இதையும் படிங்க: கர்நாடகாவில் தயாரிக்கப்பட்டுள்ள 140 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட தேசியக்கொடி!

    அதேபோல், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அமைப்பின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபலே உள்ளிட்ட முன்னணி ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் தேசிய கொடியை டிபியாக மாற்றியுள்ளனர். அத்துடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தேசிய கொடி ஏற்றும் காணொலியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.


    அதேபோல், ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரையில் நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியேற்றும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, பாஜகவினர், அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது ரஜினிகாந்த், விஜய் போன்ற முன்னணி பிரபலங்களும் வீட்டில் தேசிய கொடி ஏற்றி வருகின்றனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Mohan Bhagwat, PM Modi, RSS

    அடுத்த செய்தி