• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ரூ.52,000 அபேஸ்... மொபைல் தொலைந்து போனால் இப்படியும் ஒரு பிரச்னை இருக்கு..!

ரூ.52,000 அபேஸ்... மொபைல் தொலைந்து போனால் இப்படியும் ஒரு பிரச்னை இருக்கு..!

Lost Mobile

Lost Mobile

சந்தீப்பின் தொலைந்து போன மொபைலை ராகுல் தான் கண்டெடுத்துள்ளார். தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவரான ராகுல், அந்த மொபைலை அன்லாக் செய்து, செக்யூரிட்டி கோட்கள் அனைத்தையும் தகர்த்துள்ளார்.

  • Share this:
தொலைந்து போன மொபைல் போனை வைத்து இப்படியும் கூட பணத்தை சுருட்ட முடியுமா என ஆச்சரியப்படும் அளவுக்கு இன்று தொழில்நுட்பம் தெரிந்த திருடர்களில் செயல் அமைந்துள்ளது.

ஸ்மார்ட் போன் வந்த பின்னர் அனைவரின் அன்றாட நிகழ்வுகளும் ஸ்மார்ட் ஆக மாறியுள்ளது. பாட்டு கேட்பது, படம் பார்ப்பது, பயணங்களுக்கு டிக்கெட் புக் செய்வது, டேக்ஸி, ஆட்டோ புக் செய்வது, உணவு ஆர்டர் செய்வது, காய்கறி, மளிகை சாமான் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவது, வங்கி பரிவர்த்தனைகள் செய்வது, அவ்வளவு ஏன் டீ குடிப்பது வரை ஸ்மார்ட் போன் கையில் இருந்தால் போதும் என்றாகிவிட்டது. குழந்தை பிறப்புக்கு மருத்துவ கட்டணம் தொடங்கி, மரணங்களுக்கு ஈமச்சடங்கு செய்வது வரையிலும் ஸ்மார்ட் போன் மூலம் தான் இன்று பரிவர்த்தனைகள் நடந்து கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட ஸ்மார்ட் போன் தொலைந்து போனால் அவ்வளவு தான். நகரத்தின் நடுவே வசித்தாலும் கூட தூர தேசத்தில் தனித்துவிடப்பட்டவர் போல நம் வாழ்க்கை மாறிவிட்டதை உணர முடியும். டெல்லியில் தனது மொபைலை தவறவிட்டவருக்கு ஒரு நூதன அனுபவம் கிடைத்திருக்கிறது.

Also read:  பெண்ணை நிர்வாணப்படுத்தி போலீஸ் நிலையத்தில் நடனம் ஆட வைத்த பெண் காவல் ஆய்வாளர்..

கடந்த நவம்பர் 3ஆம் தேதி டெல்லியின் புராரி பகுதியைச் சேர்ந்த சந்தீப் சர்மா என்பவர் தனது மொபைலை தொலைத்து விட்டார். தலைவிதி என நினைத்துக் கொண்டு வேறு ஒரு புதிய போனை வாங்கிய சந்தீப் சர்மா தனது பழைய மொபைல் எண்ணை மட்டும் புதிய சிம் வாங்கி மீட்டெடுத்தார். அதன் பின்னர் தான் அவருடைய போன்பே வாலட் ஆக்டிவ் ஆக இருப்பதையும், அதில் இருந்து மர்ம நபர் ஒருவர் 52,860 ரூபாய் பணத்தை வேறு அக்கவுண்டுக்கு மாற்றியிருந்ததும் தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக இது தொடர்பாக புராரி காவல்நிலையத்தில் சந்தீப் சர்மா புகாரளித்தார். இச்சம்பவம் குறித்து விசாரித்த போலீசார் சந்தீப்பிடம் இருந்து பணம் மாற்றப்பட்ட கணக்கின் உரிமையாளரை தொடர்பு கொண்டு விசாரித்தநிலையில் சஞ்சய் மற்றும் ராகுல் தாஸ் ஆகிய இருவர்தான் சந்தீப் சர்மாவின் பணத்தை திருடியது தெரியவந்தது.

Also read:  மொபைலில் சத்தமாக பாட்டு கேட்கும் பயணிகளை பேருந்தை விட்டு இறக்கிவிடலாம் - உயர்நீதிமன்றம் அதிரடி

சந்தீப்பின் தொலைந்து போன மொபைலை ராகுல் தான் கண்டெடுத்துள்ளார். தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவரான ராகுல், அந்த மொபைலை அன்லாக் செய்து, செக்யூரிட்டி கோட்கள் அனைத்தையும் தகர்த்து பின் போன்பே வாலட்டில் 50,000க்கும் மேல் பணம் இருப்பதை தெரிந்து கொண்டு, பான் கடை வைத்திருக்கும் சஞ்சயின் கணக்கிற்கு 6 - 7 தவணைகளாக சந்தீப்பின் பணத்தை மாற்றியிருக்கிறார். சஞ்சய் தனக்கென கொஞ்சம் பணத்தை வைத்துக் கொண்டு மிச்சப்பணத்தை ராகுலிடம் கொடுத்திருக்கிறார். இதையடுத்து சந்தீப்பிடமிருந்து திருடிய பணத்தில் வாங்கிய 20,000 மதிப்புள்ள புதிய போன் ஒன்றை ராகுலிடமிருந்து பறிமுதல் செய்த போலீசார் ராகுல், சஞ்சய் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: