ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 திட்டம் சாத்தியமே: காங்கிரஸ் விளக்கம்!

மாத வருமானம் 12 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் உள்ள குடும்பங்கள் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு ஆண்டுதோறும் 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

Web Desk | news18
Updated: March 27, 2019, 11:45 AM IST
ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 திட்டம் சாத்தியமே: காங்கிரஸ் விளக்கம்!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
Web Desk | news18
Updated: March 27, 2019, 11:45 AM IST
ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72,000 ரூபாய் வழங்கும் காங்கிரஸின் வாக்குறுதி, பிரபல பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்னின் வறுமை குறியீடு அடிப்படையில் சாத்தியமே என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், நாட்டில் உள்ள 20% ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் தலா 72,000 ரூபாய் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

5 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்குவதால், 25 கோடி மக்கள் பயன்பெறுவர் என்றார். இந்தத் திட்டத்தால் ஏற்படும் நிதி தாக்கத்தை காங்கிரஸ் கட்சி ஆய்வு செய்துவிட்டது.

கடந்த சில மாதங்களாக எல்லா கணக்கீடுகளையும் போட்டுப் பார்த்துவிட்டோம். புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, இந்தத் திட்டத்தை இறுதி செய்துள்ளோம்” என்று ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

ராகுல் காந்தியின் குறைந்தபட்ச வருவாய் உறுதி அளிப்புத் திட்டம் பற்றி கருத்து தெரிவித்துள்ள நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 என்ற காங்கிரஸ் அறிவிப்பு ஏமாற்று வேலை என்று கூறியுள்ளார்.இதற்கு விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ், குறிப்பாக மாதம் 4,000 ரூபாய் வருமானம் ஈட்டும் குடும்பத்திற்கு 8,000 ரூபாயும், 8000 ரூபாய் வருவாய் ஈட்டும் குடும்பத்திற்கு 4,000 ரூபாயும் வழங்கும் போது, ஒவ்வொரு குடும்பமும் மாதம் 12,000 ரூபாய் என்ற குறைந்தபட்ச வருமானத்தை எட்ட முடியும் என்று கூறியுள்ளது.

நாட்டில் உள்ள குறிப்பிட்ட சில தொழிலதிபர்களின் 3 லட்சம் கோடி கடன்களை பாஜக அரசு தள்ளுபடி செய்யும்போது, ஏழைகளுக்கான தங்களது திட்டம் சாத்தியமே என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக் குழு உறுப்பினர் பாலச்சந்திர முன்கேகர் தெரிவித்துள்ளார்.

Also see... தேர்தல் 40/40: தருமபுரி தொகுதி ஒரு சிறப்பு பார்வை! 
First published: March 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...