கொரோனா நிவாரணம்: டெல்லியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு 5000 ரூபாயை அளிக்க கெஜ்ரிவால் உத்தரவு..!

வீடுகள் இல்லாமல் தவிப்போருக்காக இரவு நேர முகாம்களை அதிகப்படுத்தவும் அந்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது

கொரோனா நிவாரணம்: டெல்லியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு 5000 ரூபாயை அளிக்க கெஜ்ரிவால் உத்தரவு..!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
  • Share this:
டெல்லியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு 5000 ரூபாயை அளிக்க அந்த மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் நாடு முழுக்க அடித்தள மக்கள் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத் தேவையை நிவர்த்தி செய்வதற்காக சில மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுமானப் பணியாளர்களுக்கும் இந்தத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வீடுகள் இல்லாமல் தவிப்போருக்காக இரவு நேர முகாம்களை அதிகப்படுத்தவும் அந்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், டெல்லியில் வாடகை வீடுகளில் குடியிருக்கும் சில தினக்கூலி ஊழியர்கள் வீட்டு வாடகை கொடுக்க முடியாத சூழலில் அவர்களுக்கு சில சலுகைகளையும் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.


Also see:
First published: March 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்