லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பயந்து ரூ.5 லட்சத்தை தீ வைத்து எரித்த தாசில்தார்

மாதிரிப் படம்

லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனைக்கு பயந்து 5 லட்சம் ரூபாய் லஞ்சப் பணத்தை தீயிட்டு கொளுத்த முயன்ற தாசில்தார் கைதுசெய்யப்பட்டார்.

 • Share this:
  தெலங்கானாவில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனைக்கு பயந்து 5 லட்சம் ரூபாய் லஞ்சப் பணத்தை தீயிட்டு கொளுத்த முயன்ற தாசில்தார் கைதுசெய்யப்பட்டார்.

  கர்னூல் மாவட்டம் எல்.பி நகரில் தாசில்தாராக பணியாற்றி வரும் வெங்கட கவுடு அதேபகுதியை சேர்ந்த நபருக்கு குவாரி அனுமதி வழங்க 6 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

  இதுகுறித்து அந்த நபர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார். மேலும், லஞ்ச ஒழிப்புத்துறையினர் அறிவுரைப்படி தாசில்தார் வெங்கட கவுடுவின் வீட்டிற்கு சென்று 5 லட்சம் ரூபாய் லஞ்சமாகக் கொடுத்துள்ளார்.

  அதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்த வருவதை அறிந்த வெங்கட கவுடு, லஞ்சப் பணம் முழுவதையும் தீ வைத்து எரிக்க முயன்ற போது அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.

  அப்போது, வெங்கட கவுடு மீது உள்ளூர் மக்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
  Published by:Tamilmalar Natarajan
  First published: