ரூ.28,000 கோடி நிதி மோசடி, தமிழகத்தில் மட்டும் 50,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள்.. விஸ்வரூபம் எடுக்கும் சிபிசிஐடி வழக்கு..

முதலீட்டாளர்களிடம் 28 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டதாக ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் மேனேஜ்மென்ட் நிறுவனம் மீது சிபிசிஐடி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்பக் கிடைக்குமா?

  • News18 Tamil
  • Last Updated: September 27, 2020, 10:21 AM IST
  • Share this:
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் கிளைகளை அமைத்து செயல்படும் நிறுவனம் ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் மேனேஜ்மென்ட் இந்தியா லிமிடெட். இந்த நிறுவனம் பல்வேறு நிதி திட்டங்களில் இந்தியா முழுவதும் 40 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. பொதுமக்கள் லட்சக்கணக்கான கோடி ரூபாய் பணத்தை பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர். தமிழகத்திலும் 14-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 6 நிதி திட்டத்தை, திடீரென இந்த நிதிநிறுவனம் நஷ்டம் அடைந்ததாக கணக்குக் காட்டி நிறுத்தியுள்ளது. ஆறு திட்டத்தில் மட்டும் இந்தியா முழுவதும் 3 லட்சம் முதலீட்டாளர்கள் உள்ளனர். தமிழகத்தில் 50,000 மேற்பட்ட முதலீட்டாளர்கள் உள்ளனர்.

சுமார் 28,000 கோடி ரூபாய் முதலீடு ஆனது இந்த ஆறு திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்தியா முழுவதும் முதலீட்டாளர்கள் அந்தந்த மாநிலத்தில் புகார் அளித்தனர். சென்னை உயர் நீதிமன்றம் உட்பட அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டது.


இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்காக சென்னை ஃபைனான்ஷியல் மார்க்கெட் அண்ட் அக்கவுண்டபிலிடி என்ற நிறுவனத்தின் மூலம் முதலீட்டாளர்கள் சிபிசிஐடி போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க.. தாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன?

இந்த புகாரின் அடிப்படையிலும், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், சிபிசிஐடியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் அசஸ்மண்ட் மேனேஜ்மண்ட் என்ற நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

28000 கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில், இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சந்தோஷ் தாஸ் காமத், தலைமை முதலீட்டு அதிகாரி சஞ்சய், இயக்குனர்கள் ஜெயராம் சுப்பிரமணியம், விவேக் குட்வா, ஆர்.வி. சுப்பிரமணியம், பிரதீப் சா உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் மேனேஜ்மென்ட் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்த நிதி திரும்பக்கிடைக்குமா?
First published: September 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading