மேற்கு வங்க மாநில கல்வித்துறை அமைச்சருக்கு நெருக்கமான நபரில் வீட்டில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.20 கோடி பணம் ரொக்கமாக சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநில கல்வித்துறையில் பெரும் ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறைக்கு கிடைத்த ஆதாரத்தின் பேரில் நேற்று பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அம்மாநில கல்வி அமைச்சர் பரேஷ் சி அதிகாரி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பார்தா சட்டர்ஜி, மேற்கு வங்க ஆரம்ப கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவர் மானிக் பட்டாச்சாரியா, மேலும் முக்கிய அமைச்சர்களுக்கு நெருங்கியவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது.
இந்த சோதனையில் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜிக்கு நெருங்கிய கூட்டாளியான அர்பிதா முக்கர்ஜி என்பவர் வீட்டில் மட்டும் கோடிக்கணக்கான பணம் ரொக்கமாக கண்டுபிடிக்கப்பட்டது. கட்டுக்கட்டாய் குவிந்திருந்த நோட்டுக்களை பார்த்து மலைத்துப்போன அதிகாரிகள் வங்கி அலுவலர்களை அழைத்து பணம் எண்ணும் இயந்திரத்தை வாங்கி பறிமுதல் செய்த ரொக்கத்தை கணக்கிட்டுள்ளனர்.
அமைச்சரின் கூட்டாளியான அர்பிதா முகர்ஜியின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் மட்டும் சுமார் ரூ.20 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. எஸ்எஸ்சி ஊழலில் பெறப்பட்ட பணமாக இருக்கலாம் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மாநில கல்வித்துறையின் ஆசிரியர் பணிக்கான தேர்வில் பெரும் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்து இதை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு, வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறையும் இணைந்துள்ளது. நேற்று நடைபெற்ற சோதனையில் ஊழல் தொடர்பான ஆவணங்கள், வெளிநாட்டுப் பணம், தங்கம், எலக்ட்ரானிக் கருவிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:
திரௌபதி முர்முவுக்கு ஆதரவாக அணி மாறி வாக்களித்த 120 எம்எல்ஏக்கள், 17 எம்பிக்கள்!
மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சியாக பாஜக உள்ள நிலையில், அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி இந்த சோதனை குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
சோதனையில் சிக்கிய அர்பிதா முகர்ஜி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவுடன் விழா ஒன்றில் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இது வெறும் ட்ரெய்லர் தான் உண்மையான படம் இனி தான் வெளியே வரும் எனத் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.