மூன்று முட்டை ஜிஎஸ்டியுடன் 1672 ரூபாய்... பிரபல இசையமைப்பாளர் அதிர்ச்சி

மூன்று முட்டை ஜிஎஸ்டியுடன் 1672 ரூபாய்... பிரபல இசையமைப்பாளர் அதிர்ச்சி
  • News18
  • Last Updated: November 15, 2019, 7:42 AM IST
  • Share this:
அகமதாபாத்தில் மூன்று அவித்த முட்டைக்கு ஆயிரத்து 672- ரூபாய் பில் கொடுக்கப்பட்டதால் பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் சேகர் ராவ்ஜியானி அதிர்ச்சியடைந்தார்

பாலிவுட்டில் ஓம் சாந்தி ஓம், வார் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் ராவ்ஜியானி. இவர் நேற்று மாலை ஆகமதாபாத்தில் ஹயாத் ரீஜென்சி ஹோட்டலில் மூன்று அவித்த முட்டை சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு பில்லை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். மூன்று அவித்த முட்டைக்கு 1350 ரூபாய் பில் கொடுக்கப்பட்டுள்ளது.

மூன்று அவித்த முட்டைக்காக ஜி.எஸ்.டியுடன் சேர்த்து 1,672 ரூபாய்க்கு கொடுக்கப்பட்ட பில்லை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அந்த பில்லை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் 3 முட்டை 1,672 ரூபாயா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
First published: November 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
Listen to the latest songs, only on JioSaavn.com