புதுச்சேரியில் கொரோனா வரியாக ரூ.163 கோடி வசூல்.. வெள்ளை அறிக்கை வெளியிட கட்சிகள் கோரிக்கை..

புதுச்சேரியில் கொரோனா வரியாக ரூ.163 கோடி வசூல்.. வெள்ளை அறிக்கை வெளியிட கட்சிகள் கோரிக்கை..

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

கொரோனா வரியாக புதுச்சேரியில் 163 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது ஆர்.டி.ஐ.மூலம் தெரியவந்துள்ளது. இதில் மக்களுக்கு எவ்வளவு செலவிடப்பட்டது என்று வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

 • Share this:
  புதுச்சேரியில் கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக, மதுபானத்திற்கு 25.7 சதவிகிதம் வரி , பெட்ரோலுக்கு வரி, அரசு ஊழியர்களின் இரு நாள் சம்பள பிடித்தம் மற்றும் நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் என பணம் வசூலிக்கப்பட்டது. இதுதவிர முதல்வர் நேரடியாக கொரோனா நிதி பெற்றது போன்றவற்றின் மூலமும் அரசுசுக்கு கூடுதல் நிதி கிடைத்தது. இந்தநிலையில் கொரோனா நிதிக்காக அரசு ஊழியர்களிடம் எவ்வளவு தொகை பிடித்தம் செய்யப்பட்டது? மதுபான விற்பனை மூலம் கொரோனா வரி எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டது? என்கிற விவரங்களை தகவல் உரிமை சட்டத்தின் வாயிலாக சமூக ஆர்வலர் ரகுபதி கேட்டிருந்தார்.

  இதற்கு பதிலளித்து புதுச்சேரி அரசு, மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் அரசு ஊழியர்களிடம் இருந்து 8 கோடியே 44,25,544 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் மே 25 முதல் அக்டோபர் 31 வரை, மதுபானங்களின் மூலம், 148 கோடியே 6,22,550 ரூபாய் கொரோனா வரி பெற்றதாக அரசு தகவல் அளித்துள்ளது .

  மேலும் முதலமைச்சர் பெற்ற கொரோனா நிதி ஆகியவையுடன் சேர்த்து மொத்தம் 163 கோடியே 46,40,087 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தற்போது மீண்டும் கலால் துறையில் கொரோனா வரி வசூலிக்க இரண்டு மாதங்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால், கூடுதலாக பல நூறு கோடி ரூபாய் வசூலாகும்.

  இதுகுறித்து பேசிய சமூக ஆர்வலர் ரகுபதி, 100 கோடிக்கும் மேல் கொரோனா நிதி வசூலிக்கப்பட்டும், மார்ச் மாத ஊரடங்கு காலத்தில் வழங்கப்பட்ட 2000 ரூபாய்க்கு பின் ஏன் எந்த நிவாரணமும் வழங்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

  மேலும் படிக்க...அமெரிக்காவில் நர்ஸ்க்கு முதலாவது கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

  இதுதொடர்பாக பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், கொரோனா காலத்தில் வசூலிக்கப்பட்ட வரி குறித்து வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், கொரோனா தொற்றால் இறந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மற்றும் இறந்தவர்களின் வயது மற்றும் வருமானம் அடிப்படையில் நிவாரணம் தொகை வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: