Home /News /national /

சுரங்க கட்டுமான பணியின் போது நிலச்சரிவு - 10 தொழிலாளர்கள் பரிதாப பலி

சுரங்க கட்டுமான பணியின் போது நிலச்சரிவு - 10 தொழிலாளர்கள் பரிதாப பலி

விபத்து நடைபெற்ற இடம்

விபத்து நடைபெற்ற இடம்

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக தலா ரூ.15 லட்சம் வழங்க வேண்டும் என கட்டுமான நிறுவனத்திற்கு துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

    ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ரம்பான் மாவட்டம் அருகே சுரங்கப்பாதை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மலைப் பாங்கான இடத்தில் இந்த கட்டுமானம் நடைபெற்று வரும் நிலையில், அங்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி கட்டுமானப் பணியில் ஈடுபட்டுவந்த 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

    10 பேரில் ஐந்து பேர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், இருவர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்கள், ஒருவர் அசாம் மாநிலத்தையும் சேர்ந்தவர் ஆவார். மற்ற இருவர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த விபத்து வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் ஒருவரின் உடல் மட்டும் தான் மீட்கப்பட்டது. அடுத்த நாளான நேற்று மீதம் உள்ள 9 பேரின் உடல் மீட்கப்பட்டது.

    விபத்துக்கு இயற்கை பேரிடர் மட்டுமே காரணமா அல்லது நிறுவனத்தின் அலட்சியமும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நிலச்சரிவுக்கான அறிகுறிகள் இருந்த போதிலும் நிறுவனம் அலட்சியப் போக்கில் தொழிலாளர்களை அங்கு தங்க வைத்ததா என விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: உன் பெயர் முகமதா?’ என கேட்டு தாக்கப்பட்ட 65 வயது முதியவர் மரணம்

    இந்த விபத்துக்கு ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வேதனை தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக தலா ரூ.15 லட்சம் வழங்க வேண்டும் என கட்டுமான நிறுவனத்திற்கு துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் துணை நிலை ஆளுநர் ஜம்மு காஷ்மீர் அரசு சார்பாக ரூ.1 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார். அதன்படி, விபத்தில் உயிரழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 16 லட்சம் வழங்கப்படவுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Jammu and Kashmir

    அடுத்த செய்தி