• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ரூ.15 லட்சம் விரைவில் டெபாசிட் செய்யப்படும்: மத்திய அமைச்சர் நம்பிக்கை

ரூ.15 லட்சம் விரைவில் டெபாசிட் செய்யப்படும்: மத்திய அமைச்சர் நம்பிக்கை

ராம்தாஸ் அத்வாலே

ராம்தாஸ் அத்வாலே

2014-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி, ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் பணத்தை ஒரே தவணையில் இல்லாமல், படிப்படியாக மத்திய அரசு செலுத்த உள்ளதாக மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் படிப்படியாக 15 லட்சம் ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்படும் என்ற மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள இஸ்லாம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, நடந்து முடிந்த 5 மாநில சட்டப் பேரவை தேர்தலிலும், பாஜக பின்னடைவை சந்தித்தது கவலை அளிக்கிறது என்று தெரிவித்தார். மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் சிவசேனா இணைந்து போட்டியிட வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார்.

அத்துடன், 2014-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி, ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் பணத்தை ஒரே தவணையில் இல்லாமல், படிப்படியாக மத்திய அரசு செலுத்த உள்ளதாக தெரிவித்தார். இதற்காக ரிசர்வ் வங்கியிடம் பணம் கேட்டதாகவும், அவர்கள் பணம் தர மறுத்துவிட்டதாகவும் கூறினார்.

இருந்த போதும், தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி நிறைவேற்றும் வகையில் படிப்படியாக பணம் டெபாசிட் செய்யப்படும் என மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: