முகப்பு /செய்தி /இந்தியா / விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000... பயிர்க் காப்பீடு ரூ.1 - மகாராஷ்டிரா பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள்..

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000... பயிர்க் காப்பீடு ரூ.1 - மகாராஷ்டிரா பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள்..

காட்சிப்படம்

காட்சிப்படம்

மகாராஷ்டிரா மாநில அரசு பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.12,000 உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Maharashtra, India

மகாராஷ்டிரா மாநில அரசின் பட்ஜெட் தாக்கல் நேற்று நடைபெற்றது. இதில் விவசாயிகளுக்கு என்று புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சுமார் 30,000 கோடி ரூபாய் விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில அரசு பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா மாநில விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் மத்திய அரசில் வழங்கப்படும் ரூ.6,000 மேலும் மாநில அரசால் வழங்கும் ரூ.6,000 என்று இரண்டும் வழங்கப்படும். மேலும் பயிர்க் காப்பீடு திட்டத்திற்கும் அதிகபட்சமாக ரூ.1 மட்டும் செலுத்தினால் போதும் என்றும் அறிவித்துள்ளனர்.

நமோ ஷேத்காரி மஹாசம்மான் நிதி என்ற திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ரூ.6,000 வருடத்திற்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனுடன் சேர்த்து மத்திய அரசால் பிரதம மந்திரி கிசான் யோஜானா திட்டம் மூலம் வழங்கப்படும் ரூ.6000 விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம் சுமார் 1.15 கோடி விவசாயிகள் பயனடைவார்கள். இத்திட்டத்திற்காக ரூ.6,900 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Also Read : மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சந்தேகம்.. முதியவரை அடித்தே கொன்ற கும்பல்.. பீகாரில் பயங்கரம்...!

அதே போல், பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பீரீமியத்தில் 2 சதவீதத்தை விவசாயிகள் செலுத்த வேண்டும். தற்போது இந்த பீரீமியம் தொகையை அரசே செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வெறும் 1 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும். இத்திட்டத்திற்கு ரூ.3,312 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Farmers, Maharashtra