Home /News /national /

போலி செக் பயன்படுத்தி எய்ம்ஸ் மருத்துவமனை வங்கிக் கணக்கிலிருந்து ₹12 கோடி கொள்ளை!

போலி செக் பயன்படுத்தி எய்ம்ஸ் மருத்துவமனை வங்கிக் கணக்கிலிருந்து ₹12 கோடி கொள்ளை!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

எய்ம்ஸ் நிர்வாக அதிகாரிகள் இதில் சம்மந்தப்பட்டிருப்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. கையெழுத்து மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

  • News18
  • Last Updated :
    எய்ம்ஸ் மருத்துவமனையின் வங்கிக் கணக்குக்கு சொந்தமானதைப் போல, போலி காசோலையைப் பயன்படுத்தி அதனுடைய எஸ்.பி.ஐ வங்கிக் கணக்கிலிருந்து 12 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சொந்தமாக எஸ்.பி.ஐ வங்கியில் கணக்கு உள்ளது. கடந்த ஒரு மாத காலமாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்துக்கு எஸ்.பி.ஐ வங்கியின் சார்பில் வழங்கப்பட்ட காசோலைக்குரிய குளோன் செக் எனப்படும் போலி செக்கை பயன்படுத்தி பணம் எடுக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் நிர்வாகம் வங்கிக் கணக்கு வைத்துள்ள கிளை அல்லாத மற்ற கிளைகளில் இந்த போலி செக் பயன்படுத்தப்பட்டுள்ளது. மும்பையிலுள்ள வங்கிக் கிளையிலிருந்து 9 கோடி ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் பெயரிலுள்ள வங்கிக் கணக்கிலிருந்து 7 கோடி ரூபாய் எடுக்கப்படுள்ளது. மருத்துவமனை டீன் பெயரிலுள்ள வங்கிக் கணக்கிலிருந்து 5 கோடி ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது.

    எய்ம்ஸ் நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட விவரம் குறித்து என்.டி.டி.வி ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட செய்தியில், ‘எய்ம்ஸ் நிர்வாக அதிகாரிகள் இதில் சம்மந்தப்பட்டிருப்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. கையெழுத்து மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. பணத்தை வழங்கியது எஸ்.பி.ஐ வங்கி சம்மந்தப்ட்ட ஒன்று. இந்த இழப்புக்கு எய்ம்ஸ் பொறுப்பேற்க முடியாது’ என்று தெரிவித்துள்ளது.

    எஸ்.பி.ஐ வங்கியில் பணம் எடுக்கப் பயன்படுத்தப்பட்ட காசோலையில் உள்ள எண்கள் கொண்ட உண்மையான காசோலைகள் இன்னமும் எய்ம்ஸ் நிர்வாகத்திடம் உள்ளது. எய்ம்ஸ் நிர்வாகம் வங்கிக் கணக்கு வைத்துள்ள கிளை தவிர மற்ற வங்கிக் கிளைகளில் எய்ம்ஸ் நிறுவன வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

    Also see:

    Published by:Karthick S
    First published:

    Tags: Online Frauds

    அடுத்த செய்தி