முகப்பு /செய்தி /இந்தியா / பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்: தொடங்கி வைத்த மத்திய பிரதேச முதல்வர்

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்: தொடங்கி வைத்த மத்திய பிரதேச முதல்வர்

மாதிரி படம்

மாதிரி படம்

ஆண்டு வருமான ரூ.2.5 லட்சம் மிகாமல் உள்ளவர்கள், 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வசதி கொண்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu |

பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழைப் பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைத்தார்.

மத்தியப் பிரதேச மாநிலம் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவரது 65வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், பெண்களின் சமூக- பொருளாதார நிலை உயரும் என்று தெரிவித்தார். மாநிலத்தில் உள்ள 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடைய உள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக, தாக்கல் செய்யப்பட்ட  பட்ஜெட் அறிக்கையில் இந்த திட்டத்திற்கு என ரூ. 8,000 கோடி ரூபாயை அம்மாநில அரசு ஒதுக்கி இருந்தது. இந்த திட்டத்தின் கீழ், கடந்த நிதிஆண்டில் ஆண்டு வருமான ரூ.2.5 லட்சம் மிகாமல் உள்ளவர்கள், 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வசதி கொண்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப் படிவம் எதிர்வரும் 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை வழங்கப்பட இருக்கிறது.

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. முன்னதாக, அம்மாநிலத்தின் திருத்தியமைக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.  மொத்த எண்ணிகையில்,  பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2.6 கோடியாகவும்  ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2.79 கோடியாகவும் உள்ளது. மொத்தமுள்ள 52 மாவட்டங்களில் 41-ல் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

அதேபோன்று, 18 சட்டமன்றத் தொகுதிகளில் ( அனைத்தும் பழங்குடியினர் சமூகத்துக்கு ஒதுக்கப்பட்ட) பெண் வாக்காளர்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன. எனவே, தேர்தல் வெற்றியில் பெண்களின் பங்களிப்பை உணர்ந்த அரசியல் தலைவர்கள் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றன. 

First published:

Tags: Women