ராகுல், சோனியா ரூ.100 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை தகவல்!

2011 - 12 நிதியாண்டில், அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் மூலம், சோனியா காந்தி 155 கோடியும், ராகுல் காந்தி, 154 கோடியும் வருமானம் ஈட்டியதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

news18
Updated: January 10, 2019, 9:13 AM IST
ராகுல், சோனியா ரூ.100 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை தகவல்!
சோனியா காந்தி, ராகுல் காந்தி
news18
Updated: January 10, 2019, 9:13 AM IST
வருமானத்தை குறைத்துக் காட்டி, 100 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்ததாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது தாய் சோனியா காந்தி மீது வருமான வரித்துறை குற்றம் சாட்டியுள்ளது.

2011 - 12 நிதியாண்டில், அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் மூலம், சோனியா காந்தி 155 கோடியும், ராகுல் காந்தி, 154 கோடியும் வருமானம் ஈட்டியதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

ஆனால், வரி தாக்கல் செய்யும்போது, 68 லட்ச ரூபாய் மட்டுமே வருமானக்கணக்கு காட்டியுதாகவும், எனவே 100 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பதாகவும் வருமான வரித்துறை குறிப்பிட்டது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்த நிலையில்,  சோனியா காந்தி தரப்பில் ஆஜரான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனம் 90 கோடி ரூபாய் கடனில் இருப்பதாகவும், வருமான வரித்துறை அதனை மறைத்து 40 கோடி சொத்து இருப்பதாக கூறுவதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஒரு வாரத்துக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய இரு தரப்பினருக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணையை ஜனவரி 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Also watch...

First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...