ஹோம் /நியூஸ் /இந்தியா /

தெலங்கானாவில் ஆளும் கட்சி எம்எல்ஏக்களுக்கு ரூ.100 கோடி லஞ்சம்... பாஜக ஏஜென்டுகள் 3 பேர் கைது...

தெலங்கானாவில் ஆளும் கட்சி எம்எல்ஏக்களுக்கு ரூ.100 கோடி லஞ்சம்... பாஜக ஏஜென்டுகள் 3 பேர் கைது...

சந்திரசேகர ராவ்

சந்திரசேகர ராவ்

Telangana | எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி  ஆட்சி மாற்றத்துக்கு பாஜக முயல்வதாக தொடர்ந்து  குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தெலங்கானாவில் ஆளும் சந்திரசேகராவ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் நான்கு பேருக்கு 100 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுக்க முயன்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் பாஜகவின் ஏஜென்டுகள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது

  எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி  ஆட்சி மாற்றத்துக்கு பாஜக முயல்வதாக தொடர்ந்து  குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.  தற்போது தெலங்கானாவில் அதுபோன்ற ஒரு புகார் எழுந்துள்ளது.

  ஆளும் சந்திரசேகராவ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் பைலட் ரோஹித் ரெட்டி, காந்தாராவ், பாலா ராஜு, பீராம் ஹர்ஷ்வர்தன் ஆகியோரை விலைக்கு வாங்க மூன்று பேர் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை ஹைதராபாத்திலுள்ள ஒரு பண்ணை வீட்டில் வைத்து இறுதி செய்வதாக இருந்தது.

  இதையும் படிங்க : பக்கென தீப்பற்றி எரிந்த பைக் ஷோரூம்.. சாம்பலாய் போன 36 எலெக்ட்ரிக் பைக்குகள்!

  எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குபவர்கள் பண்ணை வீட்டுக்கு பணம் மற்றும் காசோலையுடன் வந்தவுடன் ரோஹித் ரெட்டி இதுகுறித்து போலீசாரை தொடர்பு கொண்டு லஞ்சம் கொடுத்து தங்களை விலைக்கு வாங்க முயற்சி நடப்பதாக தெரிவித்தார்.  4 எம்.எல்.ஏக்களில் முக்கியமானவராக இருப்பவருக்கு 100 கோடி ரூபாயும் , மற்ற எம்.எல்.ஏக்களுக்கு தலா 50 கோடி ரூபாயும் தருவதாக பேரம் பேசினர்.

  அங்கு வந்த  போலீசார் லஞ்சம் கொடுக்க முயன்ற  ஹரியானாவை சேர்ந்த பூசாரி சதீஷ் சர்மா, திருப்பதியை சேர்ந்த சாமியார் சிம்மயாஜி, தொழிலதிபர் நந்தகுமார் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்கள் போலி அடையாளத்துடன் ஹைதராபாத்துக்கு வந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

  இதையும் படிங்க : ரூபாய் நோட்டில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும்..பாஜக எம்எல்ஏ கோரிக்கை!

  இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான  கிஷன் ரெட்டி, இந்த விவகாரம் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக்  கோரி, தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் பாஜக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

  2019ம் ஆண்டிலிருந்து தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ் அரசை கவிழ்க்க பாஜக முயற்சி செய்து வருதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

  Published by:Karthi K
  First published: