ஹோம் /நியூஸ் /இந்தியா /

தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி புகைப்படத்தை நீக்க கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி புகைப்படத்தை நீக்க கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

மனுதாரரின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், மற்ற நாடுகளில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் அந்தந்த பிரதமர்களின் புகைப்படங்களை அச்சிடுவதில்லை என தெரிவித்தார். அவர்களெல்லாம் தங்கள் பிரதமரை நினைத்து பெருமைப்படாமல் இருக்கலாம் என நீதிபதி பதில் தந்தார்.

மனுதாரரின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், மற்ற நாடுகளில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் அந்தந்த பிரதமர்களின் புகைப்படங்களை அச்சிடுவதில்லை என தெரிவித்தார். அவர்களெல்லாம் தங்கள் பிரதமரை நினைத்து பெருமைப்படாமல் இருக்கலாம் என நீதிபதி பதில் தந்தார்.

மனுதாரரின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், மற்ற நாடுகளில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் அந்தந்த பிரதமர்களின் புகைப்படங்களை அச்சிடுவதில்லை என தெரிவித்தார். அவர்களெல்லாம் தங்கள் பிரதமரை நினைத்து பெருமைப்படாமல் இருக்கலாம் என நீதிபதி பதில் தந்தார்.

மேலும் படிக்கவும் ...
 • 2 minute read
 • Last Updated :

  கொரோனா தடுப்பூசி சான்றிதழில் அச்சிடப்படும் பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்ததுடன், வழக்கு தொடர்ந்தவருக்கு, ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து கேரள உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.

  கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் அச்சிடப்படுகிறது. இவ்வாறு பிரதமரின் புகைப்படத்தை சான்றிதழில் அச்சிடுவது தனிமனித உரிமை மீறல் என கூறி கேரளாவைச் சேர்ந்த தகவல் பெறும் உரிமை ஆர்வலரான பீட்டர் மயிலிபரம்பில் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

  கடந்த டிசம்பர் 14ம் தேதி, நீதிபதி பி.வி.குன்ஹிகிருஷ்ணன் அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்த போது, பிரதமர் என்பவர் நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவருடைய படத்தை சான்றிதழில் அச்சிடுவதில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்பினார். அதற்கு மனுதாரரின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், மற்ற நாடுகளில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் அந்தந்த பிரதமர்களின் புகைப்படங்களை அச்சிடுவதில்லை என தெரிவித்தார். அவர்களெல்லாம் தங்கள் பிரதமரை நினைத்து பெருமைப்படாமல் இருக்கலாம் என நீதிபதி பதில் தந்தார்.

  இதையும் படிங்க:  இந்த வங்கியில் 10,000க்கு மேல் வரவு வைத்தாலே இனி கட்டணம் வசூல் - 2022 ஜனவரி 1 முதல் புதிய விதி அமல்!

  நீதிபதி கூறுகையில், நமக்கெல்லாம் பல்வேறு அரசியல் பார்வைகள் இருக்கலாம் ஆனால் பிரதமர் அனைவருக்குமானவர் என தெரிவித்ததுடன், 100 கோடி தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் படம் இருக்கிறது. யாரும் ஆட்சேபம் தெரிவிக்காத போது உங்களுக்கு மட்டும் என்ன பிரச்னை என கேட்டார். இந்த வழக்கை ஏற்பதற்கு ஏதேனும் முகாந்திரம் உள்ளதா என பார்க்கிறேன். இல்லை என்றால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.

  இந்த வழக்கு இன்று மீண்டும் விசாராணைக்கு வந்த போது, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி, உள்நோக்கத்துடன் இந்த மனுவை தாக்கல் செய்திருப்பதால் மனுதாரருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் தெரிவித்தார்.

  இதையும் படிங்க:   ஆசியாவுடன் கடலுக்கடியிலான ஃபைபர்-ஆப்டிக் கேபிள் சிஸ்டம் - கூகுள், மெட்டாவிற்கு அமெரிக்கா ஆதரவு

  இந்த வழக்கு அற்பமானது, "அரசியல் உந்துதல் காரணமானது மற்றும் "விளம்பர நலன் சார்ந்த வழக்கு" என கூறிய நீதிபதி பிரதமர் காங்கிரஸ்காரர், பாஜககாரர் அல்லது ஏதேனும் ஒரு அரசியல் கட்சிக்காரர் என கூறமுடியாது. அரசியலமைப்பின்படி ஒரு பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் போது, அவர் நாட்டின் பிரதமர், குடிமக்கள் அவரை பெருமையாக கருத வேண்டும். பிரதமரின் திட்டங்கள் குறித்த மாற்றுக் கருத்து இருக்கலாம். அதற்காக வேக்ஸின் சான்றிதழிலில் பிரதமர் மோடியின் படம் இடம்பெறக்கூடாது என ஒற்றுமையாக இருக்கவேண்டிய இந்த பெருந்தொற்று காலத்தில் அரசியலில் ஈடுபடக் கூடாது என தெரிவித்தார் நீதிபதி.

  இதையும் படிங்க:  சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் Yasir Shah மீது போலீசார் வழக்குப்பதிவு

  மனுதாரர் 6 வார காலத்துக்குள் அபராத பணத்தை செலுத்தாவிட்டால், அவரின் சொத்துக்களை விற்று அந்த பணத்தை நீதிமன்றத்தில் செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் நீதிமன்றத்தில் பல்வேறு முக்கிய வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது தனிநபர் நலன் சார்ந்து விளம்பரத்துக்காக நீதிமன்ற நேரத்தினை வீணடிக்க கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

  First published: