தேர்வுகளை நடத்தி ஒரு மாணவர் உயிரிழந்தாலும் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: ஆந்திர அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை

உச்ச நீதிமன்றம்

அதேசமயம், ஜூலை 31 ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளதால் மாணவர்கள் உயர்கல்வியில் சேர ஏதுவாக அனைத்து மாநிலங்களும் அதே தேதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என்று கூறியுள்ளனர்.

 • Share this:
  தேர்வுகளை நடத்தி ஒரு மாணவர் உயிரிழந்தாலும் ஒரு கோடி  ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என ஆந்திரா அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  12 ஆம் வகுப்புத் தேர்வுகளை தேர்வை ரத்து செய்யாத ஆந்திரா உள்ளிட்ட நான்கு மாநிலங்கள் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து மாநிலங்களும் ஒரே மாதிரியான மதிப்பீடு செய்து 12 ஆம் வகுப்பு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

  அதற்கு மறுப்பு தெரிவித்த, நீதிபதிகள் ஒவ்வொரு கல்வி வாரியமும் சுதந்திரமான அமைப்பு. அவர்களின் முடிவில் தலையிட்டு ஒரே மாதிரியான முடிவை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட முடியாது என்று தெரிவித்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதேசமயம், ஜூலை 31 ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளதால் மாணவர்கள் உயர்கல்வியில் சேர ஏதுவாக அனைத்து மாநிலங்களும் அதே தேதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என்று கூறியுள்ளனர். அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான 12 ஆம் வகுப்பு மதிப்பெண் மதிப்பீட்டு முறையை பின்பற்ற உத்தரவிட முடியாது.

  அதே நேரத்தில் சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு செய்துள்ள ஜூலை 31க்குள் அனைத்து மாநிலங்களும் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
  Published by:Esakki Raja
  First published: