ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த சிறுமி... சக்கரத்தில் சிக்காமல் காப்பாற்றிய ஆர்பிஎஃப் வீரர்

ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த சிறுமி... சக்கரத்தில் சிக்காமல் காப்பாற்றிய ஆர்பிஎஃப் வீரர்

ரயில்

ரயில்

இன்னும் சிறிது நேரம் விட்டிருந்தால் ரயிலுக்கும் பிளாட்ஃபார்மிற்கும் இடைப்பட்ட இடைவெளியில் சிறுமி சிக்கிக் கொண்டிருப்பார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  ஓடும் ரயிலில் ஏற முயன்று, நிலை தடுமாறி கீழே விழுந்த சிறுமியை பிளாட்ஃபார்மிற்கும் ரயிலிற்கும் இடையே மாட்டி கொள்வதில் இருந்து ரயில்வே பாதுகாப்பு படை வீரர் காப்பாற்றிய சம்பவத்தி வீடியோ வைராகி வருகிறது.

  ஆர்பிஎஃப் எனப்படும் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் பல்வேறு நேரங்களில் பொதுமக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றியுள்ளார்கள். அதிலும் ரயில் நிலையங்களில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளின் போது மிக துரிதமாக செயல்பட்டு நிலைமையை சரியாக கையாளுவார்கள்.

  அந்த வகையில் கேரளாவின் திரூர் ரயில் நிலையத்தில் ரயில் கிளம்பிய நிலையில் அதில் ஏற முயன்ற சிறுமி ஒருவர் கீழே விழ உடனடியாக செயல்பட்ட சதீஷ் என்ற தலைமை காவலர் ரயில் சக்கரங்களில் மாட்டி கொள்வதில் இருந்து அவரை காப்பாற்றியுள்ளார். ஆர்பிஎஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் வலைதள பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

  அந்த வீடியோவில் ரயில் இயங்கிக் கொண்டிருக்கும்போது அதில் ஏற முயற்சிக்கும் அந்தப் பெண் ரயில் சிறிது வேகம் எடுக்கவே நிலை தடுமாறி கீழே விழுகிறார். அவ்வாறு விழுந்த அந்த சிறுமி, இன்னும் சிறிது நேரம் விட்டிருந்தால் ரயிலுக்கும் பிளாட்ஃபார்மிற்கும் இடைப்பட்ட இடைவெளியில் சிக்கிக் கொண்டிருப்பார். அதிர்ஷ்டவசமாக அங்கே நின்று கொண்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலரான சதீஷ் இந்த சிறுமி நிலை தடுமாறி விழுவதை உடனடியாக கவனித்துவிட்டார்.

  சரியாக காவலர் நிற்கும் இடத்திற்கு அருகே விழுந்த அந்த சிறுமியை உடனடியாக இழுத்து காப்பாற்றி விட்டார் சதீஷ். கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்திலுள்ள திரூர் ரயில் நிலையத்தில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஐந்தரை மணிக்கு இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.

  உருவக்கேலியை ஒடுக்க வேண்டும்.. கேரள அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!

  கடந்த வெள்ளிக்கிழமை பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவானது தற்போது வரை 2,100 க்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. மேலும் அந்த பாதுகாப்பு படை வீரரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

  இப்படிப்பட்ட நேர்மையான அதிகாரிகளை பார்ப்பதற்கு பெருமையாக உள்ளது என ஒருவரும், ரயில்களில் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும், அதுவரை இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும் என்று மற்றொருவரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

  கருவில் பெண் சிசு.. நாட்டு மருந்து என விஷத்தை கொடுத்து கர்ப்பிணியைக் கொன்ற கொடூர கணவன்!

  சமீபத்தில் இதுபோன்று சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. உத்தரப் பிரதேசத்தில் கூட ஒரு பெண் ஓடும் ரயிலில் ஏற முயற்சிக்கும்போது நிலை தடுமாறு கீழே விழ அங்கு இருந்த டிக்கெட் பரிசோதனை செய்யும் அதிகாரி ஒருவர் அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளார்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Accident, Indian Railways, Moving train, RPF