ஆந்திராவில் புல்லட் பைக் ஒன்று வெடித்துச் சிதறி நெருப்பை கக்கியது. இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மைசூரை சேர்ந்த ரவிச்சந்திரா என்பவர் புல்லட் என்று பரலவாக அழைக்கப்படும் ராயல் என்ஃபீல்டு பைக்கை புதிதாக வாங்கியுள்ளது. புதிய பைக் ஆர்வத்தில் மைசூரில் இருந்து ஆந்திர மாநிலம் குண்டக்கல்லி உள்ள ஆஞ்சனேயர் கோயிலுக்கு அவர் பைக்கில் வந்துள்ளார். இடைப்பட்ட 387 கிலோ மீட்டர் தூரத்தில் அவர் எங்குமே நிற்கவில்லை. பைக்கை வெளியே நிறுத்தி வைட்டு ரவிச்சந்திரா சாமி தரிசனம் செய்துள்ளார்.
இந்த நிலையில் கோயிலுக்கு வெளியே பைக் நிறுத்தப்பட்டிருந்தபோது, முதலில் லேசாக தீப்பிடித்தது. பின்னர் பெட்ரோல் டேங்க வெடித்ததில் பலத்த சத்தத்துடன் தீயைக் கக்கிக் கொண்டு பைக் வெடித்து சிதறியது.
కసాపురంలో బుల్లెట్ బండి మైసూరు నుండి కసాపురం కు నాన్ స్టాప్ గా వచ్చినందుకు పేలిపోయింది #guntakal #RoyalEnfield #Bullet #bike #fire #ACCIDENT #RoyalsFamily #RoyalEnfield pic.twitter.com/GGaRAnCY5x
— Allu Harish (@AlluHarish17) April 3, 2022
இதையடுத்து அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விபத்தில் நல்வாய்ப்பாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
பாதுகாப்பு அம்சங்களுக்கு பெயர்போன ராயல் என்ஃபில்டு பைக் வெடித்து சிதறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஐதராபாத்தில் ப்யூர் இ.வி. என்ற புதிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட எலக்ட்ரிக் பைக் சென்னை அருகே தீப்பிடித்து எரிந்தது.
அதற்கு முன்பாக கடந்த மாதம் 28-ம்தேதி ஓலா எஸ் 1 எலக்ட்ரிக் வாகனம் புனேவில் தீப்பிடித்து எரிந்தது. இதற்கு சில நாட்கள் முன்பாக வேலூரில் ஒகினாவா நிறுவனத்தில் எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Andhra Pradesh