• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அரசு மீட்டிங்கில் முதல்வரின் மகன்.. பஞ்சாபில் அடுத்த சர்ச்சை!

அரசு மீட்டிங்கில் முதல்வரின் மகன்.. பஞ்சாபில் அடுத்த சர்ச்சை!

Charanjit singh channi

Charanjit singh channi

அலுவல் ரீதியிலான அரசின் கூட்டங்களில் முதல்வர் அல்லது அமைச்சரின் மகன், மகள், உறவினர் என யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்பது விதிமுறை

  • Share this:
முதலமைச்சர், மாநில டிஜிபி உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், முதல்வரின் மகனும் கலந்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி, பஞ்சாபில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நவ்ஜோத் சிங் சித்துவுடனான நீண்ட அரசியல் மோதலுக்கு பின்னர் பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அமரிந்தர் சிங். அவர் காங்கிரஸ் கட்சிக்குள் அவமதிப்பை சந்தித்ததாகவும், தலைமை குறித்தும் தனது அதிருப்தியை அப்பட்டமாக வெளிப்படுத்தினார். அமரிந்தரை தொடர்ந்து சரன்ஜித் சிங் சன்னி பஞ்சாபின் புதிய முதல்வராக தேர்வானார்.

இதன் பின்னர், முதல்வர் சரன்ஜித் சிங், சித்து உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சண்டிகரில் இருந்து 250 கிமீ தொலைவில் உள்ள டெல்லிக்கு 16 பேர் பயணம் செய்யக்கூடிய தனி விமானத்தில் பயணம் செய்தது, பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து விலகியது என பஞ்சாப் மாநிலத்தில் அடுத்தடுத்த அரசியல் திருப்பங்களும், சர்ச்சைகளும் அரங்கேறி கொண்டிருந்தன. இந்நிலையில் முதல்வரின் மகன், அரசின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டது புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

Also Read:  ஷாருக்கான் மகன் ஆர்யனிடம் விசாரணை. உல்லாசக் கப்பலில் போதை பார்ட்டி.. நடந்தது என்ன?

கடந்த வியாழனன்று முதல்வர் சரன்ஜித் சிங் சன்னி, டிஜிபி, அமைச்சர் பர்கத் சிங் உள்ளிட்ட அமைச்சர்காள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட அரசின் ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. இந்த மீட்டிங் நடந்த அறையில், முதல்வர் சரன்ஜித் சிங்கின் மகன் ரித்ம்ஜித் சிங் இருந்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.

punjab crisis


சட்டத்துறை வல்லுநர்களின் கூற்றுப்படி, அலுவல் ரீதியிலான அரசின் கூட்டங்களில் முதல்வர் அல்லது அமைச்சரின் மகன், மகள், உறவினர் என யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்பது விதிமுறை. இது அரசின் ரகசியத்தை அம்பலப்படுத்தும் செயல் என்றும், இதன் மூலம் முதல்வர் பதவியேற்றுக்கொண்ட போது எடுத்துக் கொண்ட பிரமாணத்திற்கு விரோதமானது எனவும் கூறுகின்றனர்.

Also Read:   NCB-யால் விசாரிக்கப்படும் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் பற்றி அறிந்திராத உண்மைகள்!

மேலும், இவ்வளவு உயர் பொறுப்பில் இருப்பவர் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட்டிருக்க வேண்டும், அல்லது அங்கிருந்தவர்களாவது அதனை முதல்வரிடம் தெரிவித்திருக்க வேண்டும் என சட்ட வல்லுநரகள் கூறுகின்றனர்.

பஞ்சாப் பாஜக தலைவர் அஸ்வனி சர்மா கூறுகையில், முதல்வர் மூன்று முறை எம்.எல்.ஏவாக இருந்தவர் என்பதால் விதிகள் பற்றி அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும், அந்த வகையில் முதல்வரின் இச்செயல் நெறிகளுக்கு அப்பாற்பட்டது. இது போன்ற ஒன்று நடந்திருக்கவே கூடாது என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: