சாப்பாடு ஊட்டிய பள்ளி மாணவி... வீடியோ வைரலானதால் சர்ச்சையில் மாட்டிய எம்.எல்.ஏ...!

சாப்பாடு ஊட்டிய பள்ளி மாணவி... வீடியோ வைரலானதால் சர்ச்சையில் மாட்டிய எம்.எல்.ஏ...!
வீடியோவில் பரவிய காட்சிகள்
  • News18
  • Last Updated: November 11, 2019, 1:52 PM IST
  • Share this:
பள்ளி தலைமை ஆசிரியர் ஓய்வு பெறும் நிகழ்ச்சிக்குச் சென்ற டி.ஆர்.எஸ் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு மாணவி ஒருவர் சாப்பாடு ஊட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஜன்கோன் மாவட்டம் கான்பூர் (நிலையம்) தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தாடிகொண்டா ராஜையா. ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த அவர் சமீபத்தில், சில்பூர் பகுதியில் உள்ள அரசுப்பள்ளிக்கு சென்றார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒய்வு பெறும் நிகழ்ச்சிக்கு சென்ற அவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் சாப்பாடு ஊட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது. சேரில் அமர்ந்திருக்கும் அவருக்கு மாணவி, எம்.எல்.ஏ.வுக்கு சாப்பாடு ஊட்ட பக்கத்தில் ஒருவர் தண்ணீர் பாட்டிலுடன் நின்றிருந்தார்.


இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், பலரும் எம்.எல்.ஏவை விமர்சித்திருந்தனர். இது பற்றி விசாரிக்கையில், மாணவர்களின் அழைப்பின் பெயரில், எம்.எல்.ஏ அந்த நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த மதிய உணவு விருந்திலே இந்த சம்பவம் நடந்துள்ளது.இது பற்றிய கேள்விக்கு பதிலளித்த ராஜையா, “பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி அவர். அவராக முன் வந்து சாப்பாடு ஊட்டினார். அவரை எனது மகளாக நினைத்து ஊட்டியதை ஏற்றுக்கொண்டேன். எதுவுமே தெரியாமல் பலரும் விமர்சிக்கின்றனர்” என்று கூறியுள்ளார்.

Also See...
First published: November 11, 2019, 1:52 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading