மகாராஷ்டிராவில் உள்விளையாட்டரங்கின் தடகள ஓடுபாதையில் சரத் பவார் மற்றும் அமைச்சர்களின் கார்கள் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த புகைப்படங்களை பாஜக எம்.எல்.ஏ ஒருவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில், அதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் விளையாட்டுத்துறை ஆணையர் மன்னிப்பு கோரியிருக்கிறார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சிவ் சத்ரபதி உள்விளையாட்டு அரங்கத்தில், நேற்று (ஜூன் 26) நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், அமைச்சர்கள் சிலர் வருகை தந்திருந்த நிலையில் அவர்களின் கார்களை வீரர்கள் ஓடும் தடகள பாதையில் நிறுத்தியிருந்ததாக சர்ச்சை எழுந்தது.
இது தொடர்பான புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்திருந்த புனேவைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ சித்தார்த் சிரோல், “சிவசத்ரபதி விளையாட்டு வளாகத்தில் உள்ள தடகளப் பாதை சரத் பவார், விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் சத்ரபல் கேதர், இணையமைச்சர் அதிதி தர்கரே ஆகியோரின் கார்களுக்கான வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டது என்பது இழிவானது.

சிவ் சத்ரபதி உள்விளையாட்டு அரங்க ட்ராக்கில் நிறுத்தப்பட்டுள்ள கார்கள்
ஆளும் கட்சியினரின் இந்த திமிர்பிடித்த செயலால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள விளையாட்டரங்கின் ஸ்போர்ட்ஸ் ட்ராக் மட்டும் சேதமடையவில்லை, நாட்டுக்கு பெருமைதேடித்தரும் விளையாட்டு வீரர்களின் மனதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்திருந்தார். மேலும் பல குற்றச்சாட்டுகளை கூறி வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார்.
அதன்படி, சீனியரான சரத்பவார் மற்றும் அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொடுள்ளனர். கார்கள் வழக்கமாக பார்க் செய்யும் இடத்தில் இருந்து வெறும் 15 அடி தூரத்தில் தான் கூட்ட அரங்குக்கு செல்லும் லிஃப்ட் உள்ளது. இருப்பினும் அவர்கள் அராஜகமாகவும், விஐபி கலாச்சாரத்தினை எடுத்துரைக்கும் வகையில் செயல்பட்டிருக்கின்றனர் என கூறியுள்ளார்.
பாஜக எம்.எல்.ஏ இந்த புகைப்படங்களை பகிர்ந்த பின்னர் சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர் மகாராஷ்டிரா விளையாட்டு மேம்பாட்டுத்துறை விளக்கம் ஒன்றை அளித்தது. அதில் தடகள ஓடுபாதைக்கு அருகே இருக்கும் சிமெண்ட் பாதையில் சரத்பவாரில் காரை பார்க்கிங் செய்ய மட்டுமே அனுமதித்தோம். ஆனால் எதிர்பாராதவிதமாக அங்கு சில வாகனங்கள் வந்துவிட்டன. இந்த விவகாரம் குறித்து அறிந்த விளையாட்டுத்துறை அமைச்சர் இனி எதிர்காலத்தில் இது போன்று நடக்ககூடாது என தெரிவித்தார்.
மகாராஷ்டிர விளையாட்டுத்துறை ஆணையர் ஓம் பிரகாஷ் பகோரியா இந்த விவகாரத்துக்கு பொறுப்பேற்று மன்னிப்பு கோரியிருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆனால் மகா விகாஸ் கூட்டணியின் பெரும் தலைவர்கள் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ சித்தார்த் சிரோல் வலியுறுத்தியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.