ஒடிசாவில் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை - குழந்தை இல்லாத சோகத்தில் விபரீத முடிவு

"தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தற்கொலை குறிப்பு கிடைத்துள்ளது"

ஒடிசாவில் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை - குழந்தை இல்லாத சோகத்தில் விபரீத முடிவு
தற்கொலை செய்த பேராசிரியர் ராசு ஜெயபால்
  • News18
  • Last Updated: August 18, 2019, 9:57 AM IST
  • Share this:
ஒடிசாவில் உதவி பேராசிரியராக பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ராசு ஜெயபால் என்பவர், மனைவியுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் உதவி பேராசிரியராக இருப்பவர் ராசு ஜெயபால். மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர் மனைவியுடன் ரூர்கேலாவில் கல்லூரி ஆசிரியர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த இரு நாட்களாக ராசு ஜெயபால் கல்லூரிக்கு வரவில்லை.

இதனை அடுத்து சில மாணவர்கள் அவரது வீட்டுக்குச் சென்று கதவை தட்டியுள்ளனர். ஆனால், கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால், போலீசாரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. கட்டிலில் ராசு ஜெயபால் சடலமாகவும், பாத்ரூமில் அவரது மனைவி மாலவி கேசவன் சடலமாகவும் கிடந்துள்ளனர்.


அங்கிருந்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தற்கொலை குறிப்பு கிடைத்துள்ளது. அதில், குழந்தை இல்லாததால் தற்கொலை செய்வதாகவும், தங்களது மரணத்தில் யாருக்கும் தொடர்பில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.

இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளதாகவும் போலீஸ் எஸ்.பி கூறியுள்ளார். சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், உடற்கூறாய்வு அறிக்கையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எஸ்.பி குறிப்பிட்டார்.

First published: August 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்