Home /News /national /

தொடர்ந்து 16 முறை பட்ஜெட் தாக்கல், 7 முறை அமைச்சர்... சாதனையாளர் ரோசய்யா

தொடர்ந்து 16 முறை பட்ஜெட் தாக்கல், 7 முறை அமைச்சர்... சாதனையாளர் ரோசய்யா

தொடர்ந்து 7 முறை அமைச்சராக பொறுப்பில் இருந்ததும், தொடர்ந்து 16 முறை பட்ஜெட் தாக்கல் செய்ததும் இந்திய அளவில் ரோசய்யா செய்திருக்கும் சாதனையாக இருந்து வருகிறது.

தொடர்ந்து 7 முறை அமைச்சராக பொறுப்பில் இருந்ததும், தொடர்ந்து 16 முறை பட்ஜெட் தாக்கல் செய்ததும் இந்திய அளவில் ரோசய்யா செய்திருக்கும் சாதனையாக இருந்து வருகிறது.

தொடர்ந்து 7 முறை அமைச்சராக பொறுப்பில் இருந்ததும், தொடர்ந்து 16 முறை பட்ஜெட் தாக்கல் செய்ததும் இந்திய அளவில் ரோசய்யா செய்திருக்கும் சாதனையாக இருந்து வருகிறது.

    தமிழ்நாட்டின் முன்னாள் கவர்னரும், ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சருமான கே.ரோசய்யா உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ஆந்திராவின் 15வது முதலமைச்சராக கடந்த 2009-ல் இருந்து 2010 வரைக்கும் ரோசய்யா பணியாற்றியுள்ளார். குண்டூர் மாவட்டத்தில் கடந்த 1933ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4- தேதி பிறந்த ரோசய்யா ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் வர்த்தக படிப்பில் பட்டம் பெற்றுள்ளார்.

    மாணவப் பருவத்திலேயே, அவருக்கு அரசியல் மீது அதிக ஆர்வம் உண்டு. பள்ளிக்கூடத்தில் மாணவர் மன்ற தலைவராக ரோசய்யா பணியாற்றியிருக்கிறார். ஆந்திர மாநில சட்ட மேலவைக்கு 1968, 1974, 1980 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பாக அவர் தேர்வு செய்யப்பட்டார்.

    சிராளா சட்டமன்றத் தொகுதியில் 1989 மற்றும் 2004 ஆண்டுகளில் போட்டியிட்டு ரோசய்யா வெற்றி பெற்றார். பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும், ரோசய்யாவுக்கும் இடையே அரசியல் ரீதியாக நல்ல நட்புறவு உண்டு.

    ஆந்திர மாநிலத்தில் 7 முறை அமைச்சராக பல்வேறு துறைகளுக்கு ரோசய்யா பொறுப்பு வைத்திருக்கிறார். சாலை போக்குவரத்து, கட்டுமானம், வீட்டு வசதித்துறை, உள்துறை, மின்சாரத்துறை, கல்வி, சுகாதாரத் துறை, திட்டம் மற்றும் சட்டமன்ற அலுவல் துறை உள்ளிட்டவற்றில் ரோசய்யா அமைச்சராக இருந்துள்ளார்.

    Also Read : அரசியலில் முதிர்ந்த அனுபவம்; அரசியல் சட்ட புலமை கொண்டவர் ரோசய்யா : மு.க.ஸ்டாலின் இரங்கல்

    தொடர்ந்து 7 முறை அமைச்சராக பொறுப்பில் இருந்ததும், தொடர்ந்து 16 முறை பட்ஜெட் தாக்கல் செய்ததும் இந்திய அளவில் ரோசய்யா செய்திருக்கும் சாதனையாக இருந்து வருகிறது. சென்னாரெட்டி, பாஸ்கர ரெட்டி, ஜனார்தன ரெட்டி, ராஜசேகர ரெட்டி ஆகியோர் முதலமைச்சராக இருந்தபோது அவர்களது அமைச்சரவையில் நிதி அமைச்சர் பொறுப்பில் ரோசய்யா இருந்துள்ளார்.

    ஹெலிகாப்டர் விபத்தில் 2009-ல் அப்போதைய ஆந்திர முல்வர் ராஜசேகர ரெட்டி மரணம் அடைந்ததை தொடர்ந்து, ஆந்திர மாநில முதல்வராக ரோசய்யா பொறுப்பிலிருந்தார். இந்நிலையில் தமிழகத்தின் 13வது கவர்னர் என்ற பொறுப்பு ரோசய்யாவுக்கு கடந்த 2011 ஆகஸ்ட் மாதம் வழங்கப்பட்டது. அந்த பொறுப்பில் பணி காலம் முழுமையும் நிறைவு செய்த ரோசய்யா 2016 ஆகஸ்டில் ஓய்வு பெற்றார்.

    இடையே 2014 ஜூன் முதல் 2014 ஆகஸ்டு வரை கர்நாடக மாநில கவர்னர் என்ற கூடுதல் பொறுப்பு ரோசய்யாவுக்கு வழங்கப்பட்டது. 2016-ல் அரசியல் மற்றும் இதர பணிகளில் இருந்து ஒதுங்கிய ரோசய்யா, ஹைதராபாத்தில் தனது குடும்பத்தினருடன் ஓய்வு எடுத்து வந்தார். கடந்த சில நாட்களாக அவரது உடல் நிலை பலவீனம் அடைந்த நிலையில், இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்துள்ளது .இதற்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Governor, India

    அடுத்த செய்தி