Home /News /national /

ப்ளூ பிலிம் ஞாபகம் இருக்கா.. பை பை பாபு.. சந்திரபாபு நாயுடுவை விளாசிய ரோஜா

ப்ளூ பிலிம் ஞாபகம் இருக்கா.. பை பை பாபு.. சந்திரபாபு நாயுடுவை விளாசிய ரோஜா

ரோஜா

ரோஜா

சந்திரபாபு நாயுடுவின் கண்ணீர் எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது என நடிகையும், ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ரோஜா கூறியுள்ளார்.

    சந்திரபாபு நாயுடு இனி சட்டசபைக்கு வரவே முடியாது. கடவுள் உங்களை அனுமதிக்கவே மாட்டார் என நடிகையும்,  ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏவுமான ரோஜா கூறியுள்ளார்.

    ஆளுங்கட்சி உறுப்பினர்களால் அவமானத்தை தான் சந்தித்து வருகிறேன். இனி வந்தா முதல்வரா தான் இந்த சட்டசபைக்கு வருவேன்.. எனக் கண்ணீர் வடித்துள்ளார் முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. சட்டமன்ற கூட்டத்தொடரில் தன் மனைவி, குடும்பம் குறித்து ஆளும்கட்சியினர் அசிங்கமாக பேசிவிட்டதாக, செய்தியாளர் சந்திப்பில் கூறி கண் கலங்கினார். என் மனைவியையும் தவறாக பேசுகின்றனர். நான் எப்போதும் மரியாதையாக வாழ்ந்து வருபவன். இனிமேலும் என்னால் தாங்க முடியாது எனக் கூறினார்.

     



    இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் கண்ணீர் எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது என நடிகையும், ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ரோஜா கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய ரோஜா, “ 72 வயதில் என்.டி.ஆரின் அதிகாரத்தை பறித்து அவரை அவனமானப்படுத்தியது ஞாபகம் இருக்கிறதா. அதனால் தான் 71 வயதில் சந்திரபாபு நாயுடு கண்ணீர் வடிக்கிறீர்கள். நாம் ஒருவருக்கு என்ன செய்தோமோ அதுவே நமக்கு திரும்ப நடக்கும். இதே சட்டசபையில் என்னை இதைவிட மோசமாக நீங்கள் நடத்தினீர்கள். ஹைதராபாத் அசெம்பிளியில் நீங்கள் அதிகாரத்தில் இருந்தபோது ரோஜா ப்ளூ பிலிமில் நடித்துள்ளார் என பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியதும் மீடியாவிடம் சிடியில் காட்டியதை மறந்துவிட்டீர்களா.



    அப்போது உங்களுக்கு அது அநாகரீகமாக தெரியவில்லையா? உங்களுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா? உங்கள் வீட்டில் மட்டும்தான் பெண்கள் இருக்கிறார்களா எனக்கு குடும்பம் இல்லையா எனக்கு குழந்தைகள் இல்லையா. யாரை வேண்டுமானாலும் எதுவேண்டுமானாலும் சொல்லலாமா. நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை யாரும் மறந்துப்போகவில்லை.

    அதிகாரத்தில் இருந்த போது என்ன என்ன பேச்சு பேசினீர்கள். சமூகவலைதளத்தில் என்ன என்ன கருத்துகளை வெளியிட்டீர்கள். உங்களின் இந்த நிலை எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. எனக்கு என்ன என்ன கொடுமை செய்தீர்கள். சஸ்பெண்ட் நடவடிக்கை எல்லாம் என் மீது எடுத்தீர்கள். உங்கள் பேச்சுக்களால் நான் மன ரீதியாக பாதிக்கப்பட்டேன். இப்போதுதான் எனக்கு சந்தோசமாக இருக்கிறது. நீங்கள் இனி சட்டசபைக்கு வரவே முடியாது. கடவுள் உங்களை அனுமதிக்கவே மாட்டார். பை பை பாபு” என்று பேசியுள்ளார்.

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Actress Roja, Andhra Pradesh, Chandrababu naidu, JaganMohan Reddy, Politics

    அடுத்த செய்தி