ரோஜாவை சொந்த கட்சியினரே தாக்க முயற்சி - வீடியோ

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற உறுப்பினர் ரோஜா மீதி சொந்த கட்சியினர் நடத்திய தாக்குதல் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திரைப்பட நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்த நடிகை ரோஜா ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நகரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    தற்போது நகரி சட்டமன்ற உறுப்பினராகவும், ஆந்திர மாநில தொழில்துறை உட்கட்டமைப்பு கழக தலைவராகவும் அவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சித்தூர் மாவட்டம் கே.வி.புரத்தில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் கிராம தலைமை செயலகத்தை திறந்து வைப்பதற்காக அங்கு சென்றார்.

    அப்போது அந்த ஊரை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகரான மண்டல ஒன்றியக் குழு உறுப்பினர் அம்முலுவின் ஆதரவாளர்களான 200 பேர் ரோஜாவின் காரை வழிமறித்து அவருக்கு எதிராக கோஷமிட்டு தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டனர். போலீசார் அவரை மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர். ரோஜாவுக்கும் ஒன்றியக்குழு உறுப்பினர் அம்முலுவிற்கும் இடையே கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் பனிப்போரின் காரணமாக ஆதரவாளர்கள் ரோஜாவை தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.



    ஆனால், ரோஜா எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியினர் என்னை தாக்க முயன்றனர் என்றும், எங்களுடைய கட்சிக்குள் உட்கட்சி பிரச்சினை இருப்பது போல் காட்டுவதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறுகிறார்.
    Published by:Sankar
    First published: