ஹோம் /நியூஸ் /இந்தியா /

அமைச்சர் ரோஜா சென்ற கார் மீது கல் வீசி தாக்குதல்.. ஜனசேனா கட்சி நிர்வாகிகள் அதிரடி கைது..!

அமைச்சர் ரோஜா சென்ற கார் மீது கல் வீசி தாக்குதல்.. ஜனசேனா கட்சி நிர்வாகிகள் அதிரடி கைது..!

அமைச்சர் ரோஜா கார் மீது கல் வீச்சு

அமைச்சர் ரோஜா கார் மீது கல் வீச்சு

ஜனசேனா கட்சியினர் கைது செய்யப்பட்டதற்கு முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Visakhapatnam | Visakhapatnam | Andhra Pradesh

  விசாகப்பட்டினத்தில் ரோஜா உள்ளிட்ட அமைச்சர்களின் கார்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  ஆந்திர மாநிலத்துக்கு 3 தலைநகரங்கள் அமைக்க வேண்டும் என்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் பயங்கர எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் 3 தலைநகரங்கள் முடிவுக்கு ஆதரவாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் விசாகப்பட்டினத்தில் நேற்று முன் தினம் விசாகா கர்ஜனா என்ற பெயரில் பேரணி நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற ரோஜா உள்ளிட்ட ஆளுங்கட்சி அமைச்சர்கள், நிர்வாகிகள், விமான நிலையத்துக்கு காரில் திரும்பினர்.

  அப்போது மக்கள் குறை தொடர்பான மனுக்களை பெறும் ஜனவாரி நிகழ்ச்சிக்காக ஜனசேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு வந்திறங்கினார்.அங்கு அவரை வரவேற்க ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் காத்திருந்தனர். அவர்களில் பலரை விமான நிலையத்துக்குள் போலீசார் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில், அவர்கள் ரோஜா உள்ளிட்ட அமைச்சர்களின் கார்கள் மீது சரமாரியாக கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனை கண்ட போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

  இதையும் படிங்க | நாட்டில் வரவேற்கத்தக்க மாற்றம்.. இந்தியில் எம்பிபிஎஸ் திட்டத்திற்கு பிரதமர் மோடி வரவேற்பு

  மேலும் கல்வீச்சு தாக்குதல் தொடர்பாக ஜனசேனாவின் முக்கிய நிர்வாகிகள் 15 பேர் உள்பட கட்சி தொண்டர்கள் 100 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், விசாகப்பட்டினத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜனசேனா தலைவர் பவன் கல்யாண், தனது கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

  போலீசார் தன்னையும் அவமதித்ததாக குற்றஞ்சாட்டிய அவர், கைது செய்யப்பட்ட கட்சியினரை விடுவிக்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் ஜனசேனா கட்சியினர் கைது செய்யப்பட்டதற்கு முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Actress Roja, Arrest, Pawan Kalyan, Power Star pawan kalyan, YSR Congress