ஹோம் /நியூஸ் /இந்தியா /

டெல்லி ரோகினி நீதிமன்ற குண்டுவெடிப்பு வழக்கில் திருப்பம்... மத்திய அரசு விஞ்ஞானி கைது

டெல்லி ரோகினி நீதிமன்ற குண்டுவெடிப்பு வழக்கில் திருப்பம்... மத்திய அரசு விஞ்ஞானி கைது

கைது செய்யப்பட்ட நபர் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டி.ஆர்.டி.ஓ.)விஞ்ஞானியாக பணியாற்றும் பாரத் பூஷன் கடாரியா என தெரியவந்துள்ளது.

  • 2 minute read
  • Last Updated :

டெல்லி ரோகினி நீதிமன்றத்தில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் திடீர் திருப்பமாக மத்திய அரசு விஞ்ஞானி பாரத் பூஷன் கடாரியா என்பவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

டெல்லி ரோகினி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 9-ம்தேதி குறைந்த சக்திகொண்ட வெடிகுண்டு ஒன்று வெடித்து சிதறியது. நீதிமன்றத்தின் 102-வது அறை எண்ணில் ஏற்பட்ட இந்த சம்பவத்தில் ஒருவர் மட்டும் காயம் அடைந்தார். நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இதையும் படிங்க : செல்போன் தொலைந்ததால் விரக்தி... மகன், கணவரை விட்டு பெண் தற்கொலை

இருப்பினும் நீதிமன்றத்துக்கு உள்ளேயே இதுபோன்ற மோசமான சம்பவம் நடந்தது, நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும், நீதிமன்ற பாதுகாப்பு குறித்த சந்தேகங்களையும் இந்த சம்பவம் எழுப்பியது. இதற்கு முன்பாக இதே நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், பிரபல தாதா ஜிதேந்திர கோகி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த துப்பாக்கிச் சூட்டால், வெடிகுண்டு வெடித்ததற்கான காரணம் குறித்து வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது கேங்ஸ்டர் மோதலாக இருக்குமா, அல்லது நீதிபதியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் திடீர் திருப்பமாக, சம்பந்தமே இல்லாதவர் எனத் தோன்றும் வகையில் மத்திய அரசின் விஞ்ஞானி ஒருவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர், தனதுகுற்றத்தையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டி.ஆர்.டி.ஓ.)விஞ்ஞானியாக பணியாற்றும் பாரத் பூஷன் கடாரியா என தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க :  திகார் சிறை அதிகாரிகளுக்கு மாதம் ₹ 1 கோடி லஞ்சம்; 12 நடிகைகளுடன் பார்ட்டி - சுகேஷ் சந்திரசேகர் அட்ராசிட்டி

கோர்ட்டில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் ஒரு காட்சியில் கடாரியா கையில் பையுடன் வருகிறார். இன்னொரு காட்சியில் சந்தேகத்திற்கிடமான பை இல்லாமல் தோன்றுகிறார். 2-வதாக, கடாரியாவுக்கு விரோதமானவர் என்று கூறப்படும் வக்கீல், நீதிமன்றத்தில் இருக்கிறார். 3-வதாக, கடாரியா வைத்திருந்த பேக்கில், அவரது உறவினர் வேலை செய்யும் நிறுவனத்தின் லோகோ இடம் பெற்றுள்ளது. இத்தகைய காரணங்களால் சம்பவத்தை செய்தது அவர்தான் என போலீசார் உறுதி செய்துள்ளனர்.

இதையும் படிங்க : ஐதராபாத் மருத்துவமனையில் நோயாளியின் வயிற்றில் இருந்து 156 சிறுநீரக கற்கள் அகற்றம்!

விசாரணையில் கடாரியாவுக்கும், அவரது அண்டை வீட்டில் வசிக்கும் வழக்கறிஞர் அமித் வசிஸ்த் என்பவருக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்னை இருந்துள்ளது. அதை தீர்ப்பதற்காக வெடிகுண்டு வைத்து அமித்தை கடாரியா கொல்ல முயன்றுள்ளார். மேலும், ஆன்லைனில் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் இந்த வெடிகுண்டை உருவாகியுள்ளார். அதேநேரம் சரியாக வெடிகுண்டு உருவாக்கப்படாததால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

First published: